பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான உர்ஃபி ஜாவித். யூகங்களுக்கும் அப்பாற்பட்ட தன்னுடைய ஃபேஷன் சென்ஸால் ரசிகர்களின் கவனங்களை ஈர்ப்பதை வழக்கமாக கொண்டவர்.
பாலிவுட் உலகின் ஃபேஷன் சென்சேஷனாக வலம் வரும் உர்ஃபி ஜாவித், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்களில் அசத்தலான ஃபேஷன் உடைகளால் இந்தியாவின் ஹாட் செலிபிரிட்டிகளில் ஒருவராக வலம் வருகிறார்.
மீன் வலை முதல் டாய்லெட் பேப்பர் வரை தன்னுடைய க்ரியேட்டிவிட்டியை பயன்படுத்தி கிட்டத்த்தட்ட அரை நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி உலகளவில் கவனம் பெற்று வருபவர். தற்போது அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவனம் ஈர்த்துள்ளார் லைகர் பட நடிகை அனன்யா பாண்டே.
பாலிவுட் திரையுலகின் பிரபலமான வில்லன் நடிகரான சங்கி பாண்டேவின் மகளும் நடிகையுமான அனன்யா பாண்டே, வளர்ந்து வரும் பாலிவுட் நடிகைகளில் ஒருவராவார். ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2, கெஹ்ரையான், காலி பீலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'லைகர்' படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அனன்யா பாண்டே. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அப்படம் தோல்வியை சந்தித்தது.
தற்போது மூத்த அரசியல்வாதியும், வக்கீலுமான சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘கண்ட்ரோல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் நடித்து வருகிறார் அனன்யா பாண்டே. தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனன்யா பாண்டே எக்கச்சக்கமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.
சமீபத்தில் பாரிசில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனன்யா பாண்டே வித்தியாசமான உடையில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த உலகத்தின் சூப்பர் ஹீரோக்கள் பூச்சிகள் என்ற கான்செப்டில் தும்பி வடிவில் உடை ஒன்றை அணிந்து இருந்தார். கண்ணனுக்கு தெரியாத கிருமிகளை உண்டு நம்மை காக்கும் பூச்சிகள் தான் சிறந்தவை என பெரிய சைஸ் தும்பி வடிவில் ஒரு மேலாடையை அணிந்து கொண்டு அந்த ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற அனன்யா பாண்டே, உலக அளவில் கவனம் பெற்றுள்ளார்.
அனன்யா பாண்டேவின் இந்த உடை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தாலும் பலரும் இதற்கு விமர்சனங்களை எழுப்பி வருவதுடன் ஃபேஷன் சென்சேஷன் உர்ஃபி ஜாவித்தை காப்பி அடித்து தான் இது போல அவரின் உடையை வடிவமைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள் உர்ஃபி ஜாவித்தின் டை ஹார்ட் பேன்ஸ்.