60 ஆண்டுகால திரைப்பணியில் இருக்கும் உருது கவிஞர் குல்சாருக்கு 2023 ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளது.


குல்சார்


கவிஞர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் தனமைக் கொண்ட படைப்பாளி குல்சார்.  உருது மொழியில்  இவர் எழுதிய கவிதைகள் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களால் படிக்கப் படுகின்றன. கவிதைகள் தவிர்த்து 60 ஆண்டு காலமாக திரைப்பட பாடல்களுக்கு பாடல்கள் எழுதியும் வருகிறார். அவரது பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக விருது குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது






“ 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது சமஸ்கிருத இலக்கியவாதியான ஜகத்குரு ராமபத்ராச்சார்யா மற்றும் உருது கவிஞர் குலசாருக்கு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. தனது தனித்துவமான திறமையால் இலக்கிய உலகின் புதிய மைல் கற்களை எட்டியவர் குல்சார். தன்னுடைய கவிதைகளின் வழியாக புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கான கவிதை பரப்பிலும் தொடர்ச்சியாக அவர் இயங்கி வருவதை பாராட்டும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப் பட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது” என்று இந்த அறிக்கையில் குறிப்பிபடப் பட்டுள்ளது.


குல்சார் பெற்ற விருதுகள்


2002 ஆம் ஆண்டில் உருது மொழிக்கான சாகித்ய அகாடமி விருது , 2004 ஆம் ஆண்டு பத்மபூஷன் , 2013 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதுகளை குலசார் இதுவரை பெற்றுள்ளார். மேலும் திரைப்பட பாடல்களுக்காக ஐந்து தேசிய விருதுகளை அவர் வென்றுள்ளார்.


ஜகத்குரு ராமபத்ராச்சார்யா






குல்சார் தவிர்த்து சமஸ்கிருத இலக்கியவாதியான ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவுக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. துளசி பீடத்தின்  நிறுவனர் மற்றும் தலைவரான ராமபத்ராச்சார்யா ஒரு புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர், கல்வியாளர். மேலும் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். பிறப்பில் இருந்தே பார்வையற்றவரான ராமபத்ராச்சார்யா சமஸ்கிருதம் மற்றும் இந்து வேத நூல்களில் புலமை பெற்றவர்.