ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 24x7 பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது முதல் பாலிவுட்டின் சமீபத்திய ஃபேஷன் சென்சேஷனாக வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத் எதை செய்தாலும் அது ஹிட்.


ஒரு பக்கம் இவரது ஆடை இணையத்தில் ட்ரெண்ட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், மற்றொரு பக்கம் இவரை இணையவாசிகள் கண்டபடி ட்ரோல் செய்கிறார்கள். ஆனால் இவை எதற்கும் தயங்காமல் உர்ஃபி தொடர்ந்து இன்ஸ்டாவில் கடமையே கண்ணாக தன் படங்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியபடி உள்ளார்.






அந்த வகையில் சமீபத்தில் பச்சை நிற ’ஸீ த்ரூ’ உடையில் மாஸ்க் அணிந்தபடி நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தந்த உர்ஃபி ஜாவேத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. வழக்கம்போல் அதீத கவர்ச்சியும் புதுமையும் கலந்த இந்த உடையில் உர்ஃபி ஸ்பைடர் மேனைப் போல் வலம் வருவதாகக் கூறி அவரது ரசிகர்கள் கமெண்ட செய்து வைரலாக்கி வருகின்றனர். 


மற்றொரு புறம் மிக மோசமான ஆடைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறார் என அவருக்கு கண்டனங்களும் வலுத்து வருகின்றன,






முன்னதாக தன் உடை குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் சேதன் பகத்துக்கு உர்ஃபி பதிலடி கொடுத்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.


“இந்தக் காலத்தில் இளைஞர்கள் மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் ரீல் பார்த்து அதிக நேரம் செலவழிப்பது அவர்களுக்கு பெரும் கவனச்சிதறலாக உள்ளது. உர்ஃபி ஜாவேத் யார் என அனைவருக்கும் தெரியும்,'' எனப் பேசியிருந்தார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாலியல் வன்முறை கலாச்சாரத்தை சேதன் பகத் ஊக்குவிப்பதற்காகவும், பெண்களின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக சேத்தனை சாடிப் பதிவிட்டிருந்தார். மேலும் ’மீ டூ’ புகார்கள் எழுந்தபோது சேத்தன் பகத்தும் பாலியல் புகார்களில் சிக்கி அவரது ஆபாச உரையாடல்கள் குறித்த ஸ்க்ரீன்ஷாட்கள் பகிரப்பட்ட நிலையில், அவற்றைப் பகிர்ந்தும் உர்ஃபி சேத்தனை கடுமையாக சாடினார். பாலிவுட்டில் இந்தச் சம்பவம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.