அரசியல் குடும்ப பின்னணி இருந்தாலும் கூட உதயநிதி எம்.எல்.ஏவும் , கிருத்திகா உதயநிதியும் தங்களின் அன்பை பொது வெளியில் ஒப்புக்கொள்ள மறக்காதவர்கள். 7 வருடமாக காதலித்து வந்த இவர்கள்  கடந்த 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் நடிகை சங்கீதா உடனான உரையாடல் ஒன்றில் தங்களின் காதல் கதையை பகிர்ந்துள்ளனர்.

Continues below advertisement

Continues below advertisement

முதலில் பேசிய கிருத்திகா :

”நான் 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.இவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். லியோ என்னும் கலைநிகழ்ச்சிகள் குழுவில் நான் உறுப்பினர், இவர் தலைவர். அப்போ நான் சான்றிதழ்களை எல்லாம் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தேன். அதில் இவர் வந்து ஒரு சான்றிதழை எடுத்து கையெழுத்து போட்டுவிட்டு போனார். உடனே நான் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தேன். யார் இவரு , ஏதோ ஆட்டோகிராஃப் கேட்ட மாதிரி கையெழுத்து போட்டுவிட்டு போறாரு அப்படினு. அதன்பிறகு எங்கள் இருவருக்குமான நண்பர்கள் இருவர் ஒருவரை ஒருவர் அறிமுக செய்து வைத்தார்கள். அப்படித்தான் ஆரம்பித்தது.

உதயநிதி காதலைச் சொன்னப்போ..

நான் இவங்க பின்னால சுத்தினது உண்மைதான். நான்தான் முதல்ல காதலை சொன்னேன். இவங்க மறுத்துட்டாங்க. நீ அரசியல் பின்னணி கொண்ட குடும்பமாக இருக்குற, பெண்களை தூக்கிட்டு போய் ஏதாவது பண்ணிடுவ., அப்படினெல்லாம் சொன்னாங்க. நிறைய தெலுங்கு படம் பாத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதன் பிறகு என்னுடன் பேசிய பிறகு, நான் ஒரு பழம்னு இவங்களுக்கு தெரிந்துவிட்டது. வீட்டில் காதலை சொன்ன பிறகு இரண்டு குடும்பமுமே ஏற்றுக்கொண்டார்கள். முதலில் அப்பாவிடம்தான் சொன்னேன். அப்பாவுக்கு காதல் பற்றியெல்லாம் முன்னதாகவே தெரியும். ஆனால் காட்டிக்கொல்லவில்லை. பெண் யாரு என்னன்னுல்லாம் கேட்டாங்க. தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டால் பயம் விட்டுரும்ல. அதிக சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி இருந்தாங்க. முன்னதாகவே அப்பா பெண் குடும்பம் குறித்து எல்லாம் விசாரிச்சுதான் வெச்சு இருந்திருக்காங்க. அம்மாகிட்ட பேசிட்டு சரின்னு சொன்னாங்க. திருமணத்திற்கு பிறகு நான் சரண்டர் ஆகிட்டேன்" என்றார்.