மரணப்படுக்கையில் கராத்தே ஹுசைனி


கே பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்தில் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி என்கிற கராத்தே ஹுசைனி. பின் பத்ரி படத்தில் விஜய்க்கு பாக்ஸிங் பயிற்சி அளிக்கும் மாஸ்டராக நடித்து பிரபலமானார். திரைப்படங்களில் நடிப்பது தவிர்த்து முழு நேர கராத்தே பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். இவரிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார்கள். மேலும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஹுசைனியின் மாணவர் என்பது குறிப்பிடத் தக்கது. 


கராத்தே ஹுசைனி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தெரியவந்தது. இன்னும் சில நாட்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்கப்போவதாக அவர் இந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். ஒரு நாளைக்கு 2 பாட்டில் ரத்தம் ஏற்றியே நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கைவிட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனது கடைசி ஆசையாக நடிகர் பவன் கல்யாண் மற்றும் விஜய் தன்னை வந்து சந்தித்து விட்டு செல்ல வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார்


கடமையைச் செயத உதயநிதி


கராத்தே ஹுசைனியின் நிலை அறிந்து பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் அவரை நேரில் சென்று சந்தித்து வருகிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை ஹுசைனியை நேரில் சென்று சந்தித்தார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி, தனக்கு உதவக்கோரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்திய நிலையில், அதற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த உதவியை அரசியல் லாபத்திற்காக விளம்பரப்படுத்தாமல் இருந்ததற்காக உதயநிதி ஸ்டாலினை பாராட்டினார் ஹுசைனி. இப்படி அடுத்தடுத்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் சென்று ஹுசைனியை பார்த்து வரும் நிலையில் நடிகர் விஜய் மற்றும் இன்னும் அவரை சென்று பார்க்காது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது


காலம் தாழ்த்தும் விஜய்


இன்னும் சில நாட்களே உயிர் வாழப்போவதாக ஹுசைனி தெரிவித்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் காலம் தாழ்த்தாமல் அவரை நேரில் செனறு சந்திக்க வேண்டும் என்கிற குரள் வலுத்துள்ளது.