Jana Nayagan Censor: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் ரன் டைம் அதாவது எவ்வளவு நீளம் என்பது குறித்த தகவலும் கசிந்துள்ளது.

Continues below advertisement

பெரும் எதிர்பார்ப்பில் ஜனநாயகன்..

விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படம் என்பதால், ஜனநாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தணிக்கௌ குழுவிற்கு கடந்த மாதமே திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பிறகு அவர்கள் சில திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தினர். அவற்றை அனைத்தையும் செய்து முடித்த பிறகும் கூட, தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் ஜனநாயகன் திட்டமிட்டபடி ஜன.9ம் தேதி வெளியாகுமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பணிகளை பூர்த்தி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஜனநாயகனுக்கு “U/A” சான்றிதழ்

வெளியாகியுள்ள தகவலின்படி, அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அரசியல் வசனங்கள் இருப்பதால் ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம். பெரிய அளவில் காட்சிகள் நறுக்கப்படாமலும், வசனங்கள் மியூட் செய்யப்படாமலுமே படத்திற்கான சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாம். அதேநேரம், ட்ரெய்லரிலேயே அதிரடியான சண்டை காட்சிகளும், அரசியல்வாதிகளை குறிவைத்து பேசும் பல வசனங்கலும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜன.6 அதாவது இன்று காலை 11 மணியளவில் படக்குழுவிடம் சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.  அதனை தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஜனநாயகன் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என கூறப்படுகிறது. விஜயை ஒருமுறையாக திரையில் காணும் அனுபவத்தை தவறவிடக்கூடாது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

படத்தின் ரன் டைம் எவ்வளவு?

கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில், மமிதா பைஜு, பாபு தியோல், பூஜா ஹெக்டே மற்றும் பிரகாஷ் ராஜ் என பெரும் நடிகர் பட்டாளமே இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கில் ஹிட்டான பாலைய்யாவின் பகவந்த் கேசரி திரைப்படத்தின் தாக்கத்தில், பெண்கள் முன்னேற்றம், விஜயின் அரசியல் பயணம் ஆகிய இரண்டையும் கலந்து ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இது சுமார் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் அதாவது 183 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது.

பராசக்தி நிலைமை என்ன?

இதனிடையே, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி தொடங்க உள்ளது. தீவிரமான அரசியல் வசனங்களால், தணிக்கை குழு ஏராளமான திருத்தங்களை சொன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு பராசக்தி திரைப்படத்திற்கும் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிடக்கூடும்.