தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய். விஜய்யைப் போலவே தோற்றம் கொண்ட தந்தையைப் போல நடிகராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தாத்தாவைப் போல இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
விஜய் மகன் சஞ்சய் குறித்து அவரது சித்தப்பாவும், நடிகருமான விக்ராந்த் கூறியிருப்பதாவது,
மிகவும் மகிழ்ச்சி:
எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்சது, ரொம்ப சந்தோஷமே அவருக்கு டைரக்ஷன் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவ்வளவு இடத்தில் இருந்து அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது எனக்கே தெரியும். எதிர்காலத்தில் அவர் நடிக்கலாம். ஆனால், அவர் நடிக்காமல் இயக்குனர்தான் ஆவேன் என்று இருக்கிறார். அவரது அப்பாவை ( விஜய்) பார்க்கிறார்.
ரொம்ப நல்ல பையன்:
எவ்வளவு பெரிய ஸ்டார். நமக்கு கிடைக்கும். ஈஸியா உள்ளே வந்து அவரு படம் பண்ணாருனா பெரிய இயக்குனர்களே படம் பண்ணுவார்கள். அவரும் நின்றுவார். ஆனால், இதையெல்லாம் மீறி அவருக்கு பிடிச்ச விஷயத்தை செய்றாரு. அதில் சாதிக்க வேண்டும், தனியாக வந்து ஜெயிக்க வேண்டும் என்று அப்படி என்பது இந்த வயதில் ஒரு பெரிய எண்ணம். அவரு ரொம்ப நல்ல பையன். ரொம்ப சாஃப்ட் நேச்சர். அவரும் பெருசா ஜெயிக்கனும்னு ஆசைப்பட்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜேசன் சஞ்சய்க்கு பெரிய இயக்குனர்கள் உள்பட பலரிடம் இருந்து நடிக்க வாய்ப்பு வந்தது. பிரேமம் பட இயக்குனரிடம் இருந்தும் அவரிடம் ஒரு முறை நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் அதில் ஈடுபாடு காட்டவில்லை. லண்டனில் இயக்கத்திற்காக படித்த அவர் சந்தீப் கிஷனை வைத்து தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நடிகர் விக்ராந்த் விஜய்க்கு தம்பி முறை ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜேசன் சஞ்சய் கனடாவின் டொரோண்டோவிலும், இங்கிலாந்திலும் திரைப்படம் சார்ந்த படிப்பை முடித்துள்ளார்.
சந்தீப் கிஷன் நடிக்கும் இந்த படத்திற்கு சிக்மா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆக்ஷன் த்ரில்லர் கதையாக குடும்பங்கள் ரசிக்கும் வகையில் சஞ்சய் இந்த படத்தை எடுத்து வருகிறார்.
சஞ்சய் நடிப்பாரா?
விக்ராந்த் எதிர்காலத்தில் சஞ்சய் நடிக்கலாம் என்று கூறியிருப்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துடன் திரை வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். அவரது கடைசி படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், விஜய் ரசிகர்கள் அதன்பின்பு அவர் நடிக்கமாட்டார் என்ற சோகத்தில் உள்ளனர்.
ஜேசன் சஞ்சய் தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரின் பாதையை தேர்வு செய்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் என தமிழ் சினிமாவின் பல பிரபலங்களை இயக்கியவர். விஜய்யின் ஆரம்ப கால படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரே ஆவார்.