தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். வெற்றி படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாளைய தீர்ப்பு படம் மூலமாக கதாநாயகனாக தொடங்கி இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக உலா வருகிறார். 

அவரது 52வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றி அறியாத தகவல்களை கீழே காணலாம்.

1. வெற்றி படம் மட்டுமின்றி நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு ஆகிய பல படங்களில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். விஜய் அதிகமாக நடித்த சிறுவயது கதாபாத்திரங்கள் அனைத்தும் விஜயகாந்தின் கதாபாத்திரம் ஆகும். 

2. விஜய்க்கு முதன்முதலில் இளைய தளபதி என்ற பட்டம் ரசிகன். 

3. நடிகர் விஜய் தன்னுடைய சொந்த பெயரான விஜய் என்ற பெயரிலே 12 படங்களில் நடித்துள்ளார். வெற்றி, வசந்தராகம், இது எங்கள் நீதி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், நாளைய தீர்ப்பு, செந்தூர பாண்டி, ரசிகன், வசந்த வாசல், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், என்றென்றும் காதல், ப்ரியமானவளே, தெறி ஆகிய படங்களில் விஜய் என்ற பெயரிலே நடித்திருப்பார்.

 4. நடிகர் விஜய்க்கு திரையுலகில் முதன்முதலில் அடையாளம் கொடுத்த படம் பூவே உனக்காக. இந்த படத்தை திரையரங்கிற்கு காணச் சென்ற விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பரித்ததே விஜயை ரசிகர்கள் கொண்டாடிய முதல் தருணம்.

5. ஒன்ஸ்மோர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சிவாஜி, அவரைப் பார்த்து இந்த பையன் நிச்சயம் மிகப்பெரிய இடத்தை பிடிப்பான் என்று பாராட்டியுள்ளார். அவரது பாராட்டை தற்போது திரையுலகில் உண்மையாகியுள்ளது.

6. கண்ணுக்குள் நிலவு திரைப்படத்தின்போதுதான் விஜய்க்கும், சங்கீதாவிற்கும் திருமண ஏற்பாடு நடந்தது. அப்போதுதான் திருமண அறிவிப்பை விஜய் வெளியிட்டார்.

7. விஜய் திரையுலகில் வளர்ந்து வந்த தருணத்தில் தன்னை ரஜினிகாந்திற்கு அடுத்து தானே என்று காட்டிக்கொண்டு வந்தார். பிரியமுடன், யூத், பகவதி என பல படங்களில் ரஜினி ரசிகனாக சில காட்சிகளில் தன்னைக் காட்டிக்கொண்ட விஜய், அண்ணாமலை தம்பி இங்கு ஆடவந்தேன்டா என ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருப்பார்.

8. நடிகர் விஜய்யை மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக காட்டிய திரைப்படம் கில்லி. இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் திரையுலக வளர்ச்சி அபரிமிதமானது. அது தந்த ரசிகர்கள் பட்டாளமே அவர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆகியுள்ளார்.

9. நடிகர் விஜய்க்கு துப்பாக்கி படத்தின் வரை படத்திற்கான கதையை தேர்வு செய்வதில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பங்கு முக்கியமாக இருந்தது.

10. விஜய் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் 20 இயக்குனர்கள் தமிழில் அறிமுகமாகியுள்ளனர்.

11. ரசிகன் படம் முதல் இளைய தளபதியாக ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த விஜய் மெர்சல் படம் மூலமாகவே தளபதி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

12. நடிகர் விஜய் காதலுக்கு மரியாதை உள்பட 3 படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார். 

13. தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காத நடிகர் விஜய் பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படத்தில் சிறு கவுரவ வேடத்தில் நடனம் ஆடியிருப்பார்.

14. ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகோ, படம் வெளியீட்டின்போது வெளிநாடு செல்வதை விஜய் வழக்கமாக வைத்திருந்தார்.

நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசி படமாக ஜனநாயகன் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.