முகப்புபொழுதுபோக்குYear ender 2023 : த்ரிஷா முதல் நயன்தாரா வரை... கோடிகளில் புரளும் தென்னிந்திய நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Year ender 2023 : த்ரிஷா முதல் நயன்தாரா வரை... கோடிகளில் புரளும் தென்னிந்திய நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Year Ender 2023 : 2023ல் அதிகமாக சம்பளம் பெற்ற டாப் 5 தென்னிந்திய நடிகைகள் யார் யார்? ஒரு படத்தில் நடிக்க அவர்கள் சம்பளமாக எவ்வளவு கோடி ரூபாய் பெறுகிறார்கள் தெரியுமா? வாங்க பார்க்கலாம்...
தென்னிந்திய சினிமாவை வசீகரிக்கும் அழகால், திறமையான நடிப்பால் மக்களை அவர்களின் கைக்குள் அடக்கி வைத்துள்ளனர் தென்னிந்திய சினிமா ஹீரோயின்கள். சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள், வுமன் சென்ட்ரிக் திரைப்படங்கள் என ஏராளமானவை மக்களின் கவனம் பெற்று வருகின்றன. எந்த அளவிற்கு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு அவர்களின் சம்பளமும் கவனம் பெற்று வருகின்றன.
Continues below advertisement
திரிஷா கிருஷ்ணன் :
தமிழ் சினிமாவின் எவர் பியூட்டி நடிகையாக அன்று பார்த்தது போலவே இன்றும் அதே இளமையோடும் அழகோடும் இருக்கும் நடிகை திரிஷா தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க என்றுமே தவறியதில்லை. 2023ம் ஆண்டு திரிஷாவுக்கு ஒரு பிரகாசமான ஆண்டாகவே அமைந்து இருந்தது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாகவும், லியோ படத்தில் சத்யாவாகவும் வெகு சிறப்பாக நடித்திருந்தார். நடிகை திரிஷா நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 10 கோடி வரை பெறுகிறார் என கூறப்படுகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் என தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஒரு நடிகையாக இருந்து வரும் நயன்தாரா 2023ம் ஆண்டில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து விட்டார். அப்படம் உலகளவில் 1100 கோடி வரை வசூலித்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இறைவன் மற்றும் அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. இவர் ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 5 முதல் 10 கோடி வரை வசூலிக்கிறார் என கூறப்படுகிறது.
சமந்தா :
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் சமந்தாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்பு திறமையால் ஏராளமான வெற்றிப்படங்களில் ஒரு அங்கமாக இருந்த சமந்தாவுக்கு 2023ல் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று தான் சொல்லவேண்டும். புராண கதையை அடிப்படையாக கொண்டு வெளியான 'சாகுந்தலம்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போனது.
அதை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்த 'குஷி' திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இது அவருக்கு ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது. நடிகை சமந்தா தற்போது தனது மேல் சிகிச்சையாக வெளிநாடு சென்றுள்ளதால் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டுள்ளார். நடிகை சமந்தா ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 4 கோடி வரை பெறுகிறார் என கூறப்படுகிறது.
தமன்னா :
இந்தி திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 , பாந்திரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஒரு படத்தில் நடிக்க அவர் சம்பளமாக 5 முதல் 7 கோடி வரை வசூலிக்கிறார் என கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே :
தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் தெலுங்கு திரையுலகம் பக்கம் திரும்பியவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் பிரபலமான ஒரு நடிகையான பூஜா ஹெக்டேவுக்கு 'பீஸ்ட்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க வாய்ப்பு கிடைத்தது. அது அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது. ராதே ஷயாம், ஆச்சார்யா, கிசி கா பாய் கிசி கி ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பூஜா ஹெக்டே ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 5 முதல் 6 கோடி வரை வசூலிக்கிறார் என கூறப்படுகிறது.