தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக 20 ஆண்டுகால பயணத்தை இன்றும் சிறப்பாக தொடர்ந்து கொண்டு இருக்கும் நடிகை திரிஷா. அன்று போல் இன்றும் அதே அழகுடன் சற்றும் வித்தியாசமின்றி சவுத் குயின் என செல்லமாக அழைக்கப்படும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறுவதில்லை. 20 ஆண்டுகளாக ஹீரோயினாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இந்த நடிகைக்கு தானே, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என சமீபத்தில் சில வாக்குவாதங்கள் ஊடகங்களில் பரிமாறப்பட்டன. 


 




எனக்கு பதில் தான் சமந்தா :
 
இந்த வாக்குவாதங்களுக்கு முதல் முறையாக மனம் திறந்து பதிலளித்துள்ளார் நடிகை திரிஷா. அவர் கூறுகையில் "விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் வெளியான 'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தில் முதலில் சமந்தா ரோலில் நடிக்க முதலில் நான் தான் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் நான் தான் அந்த வாய்ப்பை மறுத்தேன். ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டதற்காக நான் என்றுமே வருத்தப்பட்டது இல்லை. அந்த முடிவை நான் தெளிவான மனதுடன் தான் எடுத்தேன். அதற்கான தகுந்த காரணம் ஒன்றும் என்னிடம் இருந்தது " என்றார். 


 






 


ரசிகர்களிடம் திரிஷா ரெக்வஸ்ட்:



மேலும் அவர் கூறுகையில் "நடிகை நயன்தாரா உடன் என்னை ஒப்பிட்டு சோசியல் மீடியாவில் பேசுவதை நான் வரவேற்கிறேன். நங்கள் இருவரும் ஒரே நேரத்தில் தான் எங்களின் திரை பயணத்தை தொடங்கினோம். ஒரே செட் நடிகர்களுடன் இருவருமே நடித்துள்ளோம். அது தான் எங்கள் இருவரையும் ஒப்பிடுவதற்கான முக்கியமான காரணமாக நான் கருதுகிறேன்.


எங்கள் இருவரின் ரசிகர்களின் சண்டையை நான் பாஸிட்டிவ் நோட்டில் தான் பார்க்கிறேன். நான் அதிகமாக நயன்தாராவுடன் தொடர்பில்லை. ஆனால் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்னவென்றால் சில ரசிகர்கள் அவரவர்களின் ஃபேவரட் நடிகையை புகழ்வதற்காக எதிரில் இருப்பவரை இகழ்வாக பேசவேண்டும் என எந்த ஒரு அவசியமும் இல்லை. அவர் இருவருக்கும் இருக்கும் தனித்தனி சிறப்பை எடுத்துக்கொள்ளுமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.    


 






 


ராங்கி திரிஷா :


பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக ரசிகர்களை கிறங்கடித்த திரிஷா அடுத்தாக எம். சரவணன் இயக்கத்தில் 'ராங்கி' என்ற ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவுகள் சில இடங்களில் நடைபெற்று வருகின்றன.