Watch Video : வெப் சீரிஸில் முதல் முறையாக கால் பதிக்கும் த்ரிஷா... 'பிருந்தா' டீசர் எப்படி இருக்கு?

Watch Video : தொடர்ச்சியாக திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை த்ரிஷா முதல் முறையாக இணைய தொடரில் நடித்துள்ளார். அதன் டீசர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது அஜித் ஜோடியாக விடாமுயற்சி படத்திலும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் 'தக் லைஃப்' படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவுக்கு நல்ல ஒரு கம் பேக் படமாக அமைத்தது.

 


தெலுங்கு திரையுலகில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'நாயகி' படத்திற்கு பிறகு மீண்டும் தெலுங்கு திரையுலகில் என்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். 


மேலும் த்ரிஷா தற்போது 'பிருந்தா' என்ற தெலுங்கு வெப் சீரிஸில் நடித்துள்ளார். இது த்ரிஷா நடிக்கும் முதல் இணைய தொடராகும். தொடர்ச்சியாக திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா முதல் முறையாக இணைய தொடரில் நடித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கியுள்ள இந்த தொடரில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி மற்றும் ராகேந்து மௌலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த தொடரில் த்ரிஷா ஒரு போலீஸ் அதிகாரியாக அநியாயத்தை எதிர்த்து போராடும் துணிச்சலான கேரக்டரில் நடித்துள்ளார். பெண் குழந்தையை பலிகொடுக்கும் சம்பரதாயத்துடன் துவங்கும் இந்த டீசரின் அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பை கூட்டுகிறது. தற்போது வெளியாகியுள்ள த்ரிஷாவின் 'பிருந்தா' டீசர் மக்களின் கவனம் பெற்றுள்ளது.  

 

தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மொழிகளிலும் வெளியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் சோனி லிவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola