கில்லி ரீரிலீஸ் (Ghilli ReRelease)


விஜய் , த்ரிஷா நடித்து கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி படம் தற்போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரீ - ரிலீஸ் என்றாலும் கில்லி படத்துக்கு பல மடங்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான திரையரங்குகள் மொத்தமும் ஹவுஸ் ஃபுல்லாகி நிரம்பி வழிகின்றன. மலேசியா , சிங்கப்பூர் , பாரிஸ் ஆகிய நாடுகளில் விஜய் ரசிகர்கள் திருவிழாப் போல் இபடத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில்,  20 ஆண்டுகள் கில்லி படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து நடிகை த்ரிஷா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.


கில்லி கொண்டாட்டத்தில் த்ரிஷா


கில்லி படத்தின் தனலட்சுமி கதாபாத்திரம் த்ரிஷா நடித்ததில் ரசிகர்களுக்கு பிரியமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இப்படத்தில் த்ரிஷாவுக்கு என்று தனியாக ‘ஷாலாலா..’ பாடல் இன்ட்ரோ சாங் இருக்கும். முன்பெல்லாம் இந்தப் பாடலை பெண்கள் மட்டும் தான் ரசிப்பார்கள் என்று பொதுவான இமேஜ் இருந்தது. ஆனால் தற்போது ஆண் - பெண் வித்தியாசமில்லாமல்.அனைவரும் சேர்ந்து இந்த பாடலுக்கு வைப்.செய்து வருகிறார்கள்.






இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கதில் ரசிகர்கள் கில்லி படத்தைக் கொண்டாடும் காட்சிகளை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் த்ரிஷா. மேலும் ரசிகர்களுடன் அவரும் இந்தப் படத்தை பார்க்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஹாய் செல்லம்..






விஜய் ,த்ரிஷாவுக்கு அடுத்து கில்லி படத்தில் ரசிகர்கள் கொண்டாடுவது முத்துப்பாண்டியாக நடித்த பிரகாஷ் ராஜை தான். திரையில் விஜய்க்கு வரும் சத்தத்திற்கு நிகராக பிரகாஷ ராஜூக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து "ஹாய் செல்லம்.. we are back " என, பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.


மேலும் தி கோட் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வாக்களிப்பதற்காக முன்னதாக இந்தியா திரும்பிய விஜய்,  தி கோட் படக்குழுவினருடன் சேர்ந்து கில்லி படத்தை பார்ப்பார் என்றும் தகவல்களும் வெளியாகி வருகின்றன.