தமிழகத்தில் டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் நன்மைகள் இருந்தாலும், ஒரு பக்கம் கைதாகும் அளவுக்கு குற்ற நடவடிக்கைகளும் அதிகரிக்கிறது. திருச்சி சாதனா,திவ்யா, ஜி.பி முத்து என பலர் இந்த வரிசையில் உள்ளார்கள். டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து என்ன செய்வது என்று புலம்பிய நிலையில் ஒவ்வொரு டிக் டாக் பிரபலங்களும் யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தங்களது வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் அனைவருக்கும் மிகவும் தெரிந்த நபர்களில் ஒருவர் தான் திருச்சி சாதனா.
டிக்டாக் தொடக்கத்தில் கிராமப்பெண்களிடம் இவ்வளவு நடிப்புத்திறமை உள்ளதா? என அனைவரையும் வியப்புடன் பார்க்க வைத்தவர்தான் திருச்சி சாதனா.. இதோடு இவரது வீடியோவைப்பார்க்கும் ஒவ்வொருவரும் அக்கா உங்களுக்கு சின்னத்திரை அல்லது வெள்ளித்திரையில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பது போன்ற பல கமென்ட்களையெல்லாம் தெறிக்க விட்டார்கள்.
இதன் விளைவு தான் தற்போது திருச்சி சாதனா, கிராமப்பெண்ணில் இருந்து மாறி பல ஆண்களில் கவர்ச்சி நாயகியாக மாறிவிட்டார். தொடர்ந்து, டிக்டாக்கில் கவர்ச்சியாக ஆட ஆரம்பித்த சாதனா, நாளுக்கு நாள் தனது பாலோவர்ஸ்களை கட்டி இழுக்க கவர்ச்சியாகவே இருக்க தொடங்கிவிட்டார்.
காலை பல் துலக்கும்போது கூட அரைகுறை ஆடையுடன் வலம் வர தொடங்கி, இரவில் கூட இரட்டை வசனங்கள் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இப்படியே தொடர்ந்து சாதனா கவர்ச்சியை ஆயுதமாய் எடுக்க, ஒரு கட்டத்தில் இவர் போடும் வீடியோ அனைத்தும் முகம் சுழிக்கும் பாடியாகிவிட்டது.
தொடர்ந்து, வீடியோக்களில் கெட்ட வார்த்தை பேசுதல், பெருக்கும் விளக்கமார் கொண்டு ஆண்களை தாக்குதல், இரட்டை வசனம் பேசுதல் போன்று கடந்த சில நாட்களாக இவரது சேட்டை அதிகமானது. இதை பார்த்து கடுப்பான இணையத்தள வாசிகள் சைபர்கிரைமில் சாதனா மீது புகார் அளித்தனர். இதையடுத்து, சைபர் கிரைம் காவல்துறை திருச்சி சாதனாவிற்கு 2 நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியது. அதில், அதில் தங்கள் மீது ஆபாச செய்கைகள் செய்வதாக புகார்கள் வந்துள்ளது உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என மெமோ அனுப்பியது.
இந்த மெமோவை பார்த்து பதறிப்போன திருச்சி சாதனா, உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், நான் இனி ஆபாசமாக நடித்தும், பேசியும் வீடியோவை வெளியிட மாட்டேன். அதேபோல், யூடியூப்பர்கள் எனது பழைய வீடியோக்களை பயன்படாத வேண்டாம் என்றும், மீறி பயன்படுத்தினால் காப்பி ரைட்ஸ் செய்து யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்