பிரபல இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் தயாரிப்பு  நிறுவனத்தின் அடுத்த திரைப்படமான ரைட்டர் படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.  ஃப்ராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரம் நடித்து இப்படம் உருவாகியுள்ளது.  2003-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் திருடா திருடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான  சுப்ரமணியம் சிவா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.






இப்படத்தில் திலீபன், இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 






காவல்துறையை சுற்றியும், காவல்துறைக்குள்ளும் நடக்கும் அரசியலையும், உயர்வு, தாழ்வையும் இப்படம் பேசுவதாக தெரிகிறது. காவல் நிலையத்தில் ரைட்டராக இருக்கும் சமுத்திரகனி காவல்துறையின் மறுபக்கத்தை காட்டுவதாக தெரிகிறது. விறுவிறு ட்ரைலராக ஓடும் ரைட்டர் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


ரைட்டர் ட்ரைலர் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், ’’


அதிகாரத்தின் உள்ளங்கைக்குள் சிக்கி நசுங்கி நொந்து அடையாளமற்று தூர்ந்துபோன எளிய மனிதர்களின் ஆன்மாவின் பிசுபிசுப்பை எழுத வரும் ரைட்டர் மிக சரியானவற்றை தேர்நதெடுத்து மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் நீலம் புரொடக்‌ஷன்ஸக்கும் அண்ணன் பா.இரஞ்சித் அவர்களுக்கும் என் அன்பும் ப்ரியமும் எனக்குறிப்பிட்டுள்ளார்


 

ட்ரைலர் பார்க்க......


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண