கன்னட திரையுலகின் பிரபலமான நடிகர் யஷ். சீரியலில் நடிகராக அறிமுகமாகி திரைப்படங்களில் கதாநாயகனாக அறிமுகமானார். வளர்ந்து வந்த கதாநாயகனாக இருந்த அவருக்கு கேஜிஎஃப் படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

Continues below advertisement

டாக்சிக்:

பிரசாந்த் நீல் இ்யக்கிய இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கேஜிஎஃப் பார்ட் 1, கேஜிஎஃப் பாகம் 2 படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால், யஷ்ஷிற்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகினர். 

கேஜிஎஃப் 2ம் பாகம் வெளியாகி 4 வருடங்கள் கழித்து அவரது அடுத்த படமான டாக்சிக் வரும் மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

Continues below advertisement

ரசிகர்கள் ஷாக்:

இந்த நிலையில், டாக்சிக் படத்தின் டீசர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிய இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், யஷ்ஷின் அறிமுக காட்சியில் அவர் வெளிநாட்டுப் பெண் ஒருவருடன் உடலுறவு கொள்வது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. 

கேஜிஎஃப் படத்திற்கு முன்பு யஷ் நடித்த படங்கள் அனைத்தும் குடும்ப மற்றும் காதல் படங்களே ஆகும். ஆனால், அவர் முழுக்க முழுக்க நடித்த ஆக்ஷன் படம் கேஜிஎஃப் ஆகும். கேஜிஎஃப் படத்திற்கு முன்பு வரை அவர் ஏராளமான குடும்ப மற்றும் காதல் படங்களில் நடித்ததால் அவருக்கு பெண்ரசிகைகளும், குடும்ப ரசிகர்களும் உள்ளனர். 

அன்று சொன்னது என்ன?

இவர்கள் டாக்சிக் படத்தின் டீசரால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழில் வெளியாகிய களவாணி, சுந்தரபாண்டியன் படத்தின் கன்னட ரீமேக்கிலும் யஷ்தான் நடித்திருப்பார். மேலும், அவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில் பெற்றோர்களுடன் அமர்ந்து பார்க்க அசெளகரியமான படங்களில் நான் ஒருபோதும் நடிக்கமாட்டேன் என்றும் பேட்டி அளித்திருப்பார். 

இந்த சூழலில், இதுபோன்ற காட்சி யஷ் படத்தில் இடம்பெற்றிருப்பது கேஜிஎஃப் படத்திற்கு முன்பிருந்தே அவருக்கு இருந்த குடும்ப ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி காரணமாக டாக்சிக் படத்தில் இந்த காட்சி இடம்பெறாது என்றே கருதப்படுகிறது.

ஆக்ஷன் படம்:

இந்த படமும் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாகவே இருக்கும் என்றே கருதப்படுகிறது. கேஜிஎஃப் படம் போல இந்த படமும் துப்பாக்கி, தோட்டாக்கள், ரத்தம் என வன்முறை படமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த படத்தை மலையாள திரையுலகின் பிரபல நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.