Trisha: என்னய்யா சொல்றிங்க.. த்ரிஷா பெயரில் ஒரு ஊரா!.. கொஞ்சம் மேலே பாரு கண்ணா
தக் லைஃப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் த்ரிஷாவிற்கு ரசிகர் ஒருவர் பகிர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களும் மிகவும் உண்மையில் அதிசயம்தான் என்கின்றனர்.

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக கோலோச்சி வருபவர் நடிகை த்ரிஷா. தனது இளம் வயதில் காதல், ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது அவர் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரங்களும், சர்ச்சைகளை தாண்டி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய், அஜித், கமல், ரஜினி என டாப் ஸ்டார்களின் படங்களில் தனக்கான தனி முத்திரையை பதித்து வருகிறார் த்ரிஷா. லியோ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் அம்மா, விடாமுயற்சியில் யாரும் எதிர்பார்த்திடாத கதாப்பாத்திரம், அதேபோன்று தக் லைஃப் படத்தில் அவரது கதாப்பாத்திரம் சிம்பு ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் அளித்திருக்கிறது.
செக்க சிவந்த வானம் சாயல்
மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்தாலும், செக்க சிவந்த வானம் படத்தின் சாயலில் இருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செக்க சிவந்த வானத்தில் அதிதி ராவ் நடித்த கதாப்பாத்திரம் போன்று தான் த்ரிஷா தக் லைஃப் படத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சுகர் பேபி பாடல் த்ரிஷாவுக்கேற்ற கதாப்பாத்திரம் என்றும் ரசிகர்கள் மெய்சிலிர்த்து பேசுகின்றனர். சுகர் பேபி பாடலை பார்த்த பின்பு ரசிகர்களுக்கு சற்று அதிகமாகவே சுகர் ஏறியிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. 42 வயதிலும் இளமையான அழகுடன் த்ரிஷா மிலிர்வதாகவும் கிசுகிசுக்க தொடங்கியுள்ளனர்.
வித்தியாசம் காட்டும் த்ரிஷா
சோலோ ஹீரோயினாக களம் இறங்கிய த்ரிஷாவிற்கு தொடர் தோல்வி படங்களாகவே அமைந்தன. அவர் நடித்த படங்களில் ஓரளவிற்கு பெயர் சொல்லும் படி அமைந்தது ராங்கி படம் மட்டுமே. எனவே, தொடர் தோல்விக்கு பிறகு தனது ரூட்டை மாற்றிய த்ரிஷா அவர் கமிட் ஆன அனைத்து படங்களும் ஹிட் ஆனது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. ஒரே மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்து அலுத்து போகும் வேலையை செய்யாமல் தனது வயதையும் தாண்டி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கோட் படத்தில் விஜய்யுடன் மஞ்சள் புடவையில் நடனம் ஆடி கலக்கினார். மேலும் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார்.
விமர்சனம் இருப்பது தெரியும்
தக் லைஃப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா, "மணிரத்னம் சார் படத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ளேன். இப்படத்தில் கமிட் ஆகும் போதே எனக்கு தெரியும் எனது கதாப்பாத்திரத்தை பலரும் விமர்சிப்பார்கள். அதே நேரத்தில் காட்சியாக இதை காணும்போது கண்டிப்பாக ஒரு மேஜிக் மாதிரி தெரியும். இப்படத்தில் பணியாற்றியது பெரிய அனுபவமாக இருப்பதை உணர்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
த்ரிஷா பெயரில் கிராமம்
View this post on Instagram
?
நடிகை த்ரிஷாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் அவர் மேடையில் இருந்தபோது ஒருவர் ஐ லவ் யூ என்று தெரிவித்ததற்கு சிரித்தபடியே சென்றார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் த்ரிஷா குறித்து பகிர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்தியாவின் கடைசி எல்லையான லடாக் பகுதியில் த்ரிஷாவின் பெயரில் ஒரு கிராமம் இருப்பதாக அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். அதனை வீடிேயோவாக எடுத்தும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் விவேக் போன்று என்னடா சொல்ற என்ன சொல்ற என்ற வசனத்தை பதிவிட்டு இது நிஜமா என்றும் கேட்க தொடங்கியுள்ளனர்.




















