மகிழ்ச்சியான தங்களது குடும்ப போட்டோக்களை அன்றாடம் பகிரும் மலையாள ஸ்டார்கள் பட்டியலில் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வரிசையில் டொவினோ தாமஸும் உண்டு. இவர்களின் குடும்ப போட்டோக்களுக்கு என்றே இன்ஸ்டாகிராமில் நிறைய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வரிசையில் அண்மையில் டொவினோ தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
தனது 7வது திருமண தினத்தை அண்மையில் கொண்டாடிய டொவினோ அந்த மகிழ்ச்சியைப் பகிரும் வகையில் இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், ‘ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டது. மகிழ்ச்சியோ உடைந்து போகும் குழப்பமோ எதுவாக இருந்தாலும் அந்த நாளின் இறுதியில் நான் வந்து சேர்வது இவர்களிடம்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார். டோவினோவுக்கு லிடியா என்கிற மனைவியும், இஸ்ஸா தாமஸ் என்கிற மகளும் உள்ளனர். கடந்த வருடம் ஜூன் மாதம் இவர்களுக்கு தஹான் என்கிற மகன் பிறந்தான்.
டொவினோ நடிப்பில் தற்போது மின்னல் முரளி என்கிற சையின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமும் கீர்த்தி சுரேஷுடன் வாஷி என்கிற திரைப்படமும் உருவாகி வருகிறது.