டூரிஸ்ட் ஃபேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி டிராமா திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார் , சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யோகி பாபு , எம்.எஸ் பாஸ்கர் , மிதுன் ஜெய் , பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம்.ஆர்.பி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழகத்தில் குடிபெயரும் ஈழத் தமிழ் குடும்பத்தை மையமாக வைத்து காமெடி டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் மே 1 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மேடையில் காதலிக்கு ப்ரோபோஸ் செய்த இயக்குநர்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது காதலிக்கு ப்ரோபோஸ் செய்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . இந்த நிகழ்ச்சியில் பேசிய ' டூரிஸ்ட் ஃபேமிலி குடும்பங்கள் சந்தோஷமாக பார்க்கவேண்டிய ஒரு படம். என்னுடைய அம்மா மற்றும் அப்பாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஷால் ரோல்டனுக்கு நன்றி. கடைசியாக அகிலா இளங்கோவன். ஸ்கூல் படிக்கும்போதிருந்தே உனக்கு என்னை தெரியும் .10 ஆவது படிக்கும் போதிருந்தே க்ளோஸாக இருக்கோம். இந்த இடத்தில் உன்கிட்ட ஒரே ஒரு விஷயம்தான் கேட்கனும் . வரும் அக்டோபர் 31 ஆம் தேதி என்னை கல்யாணம் பண்ணிகிறியா. நான் ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்கு என் அம்மாவிற்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவிற்கு அகிலாவிற்கும் இருக்கிறது" என அவர் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது