1.நடிகர் சூர்யா தேர்வு செய்து நடித்த கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரம் 'ரோலக்ஸ்'. ஹீரோவாகவும், புனிதபடுத்தப்படும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூர்யா,திடீரென்று மாறுபட்டு நெகடிவ் கதாபத்திரத்தில் நடித்தார்.



                   
                       


2.தனுஷின் அன்பு,சிவசாமி போன்ற முத்திரை கதாபாத்திரங்களின் வரிசையில் 'நானே வருவேன்' கதிர் கதாபாத்திரத்திற்கு முக்கிய இடமுண்டு; இருவேடங்களில் நடித்த தனுஷ் 'கதிர்' கதாபாத்திரத்தில் அசுர வில்லனாக நடித்திருந்தார்.



                     



3.மாஸ்டர்,பேட்ட,சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் விஜய் சேதுபதியின் டாப் கிளாஸ் வில்லன் கதாபாத்திரத்தை தொடர்ந்து 'விக்ரம்' திரைப்படத்தின் சந்தானம் கதாபாத்திரம் பலரை கவர்ந்தது.



                       



4.கே.ஜி.எஃபின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எஃப் -2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இத்திரைப்படத்தில்  சஞ்சய் தத்  வில்லனாக நடித்து பலரின் கவனத்தை பெற்றார்.



                       


5.கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குனர் மணி ரத்னம் திரைப்படமாக இயக்கினார்.இத்திரைப்படத்தின் நந்தினி கதாபாத்திரத்தில் நமக்கு வில்லனாக காட்சியளித்தார் ஐஸ்வர்யா ராய். 



                     


6.ஸ்பைடர்,மெர்சல்,மாநாடு ஆகிய திரைப்படத்தின் எஸ்.ஜே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பை தொடர்ந்து 'டான்' திரைப்படத்தில் காமெடி வில்லனாக நடித்திருந்தார்.



                           


7.நடிகர் விக்ரமும் இந்த வருடமும் நெகடிவ் சார்ந்த் கதாபாத்திரத்தில் மஹான் திரைப்படத்தில் நடித்து துருவ் விக்ரமிற்கு வில்லனாக மிரட்டினார்.


 


       
                     


8.விக்ரம்,வெந்து தணிந்தது காடு திரைப்படங்களில் 'ஜாபர் சாதிக்’  சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் வில்லானாக நம் கவனத்தை அதிகமாக ஈர்த்தார்.



                 



9.வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் 'கர்ஜி' கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சாராவின் வில்லத்தனமான நடிப்பு பலரால் பேசப்பட்டது.



                         


10.'உன்னாலே உன்னாலே' திரைப்படத்தின் மூலம் ரொமாண்டிக் ஹீரோவாக பரிட்சையமான நடிகர் வினய் 'டாக்டர்' திரைபடத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.'எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக அசத்தியிருந்தார்.