உலக அளவில் ஹாலிவுட் திரைப்படங்களே பெரும் அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறன்றன; அதற்கு முக்கிய காரணம் உலகமெங்கிலும் இருக்கும் அவர்களின் வியாபார கட்டமைப்பு; அதனால் அவர்களால் சிறிய நாடுகளில் கூட அவர்களின் படங்களை எளிதில் கொண்டு சேர்க்க முடிகிறது; அது மட்டுமின்றி அவர்களின் வசூல் விகிதமும் அசரவைக்கும் அளவிற்கு உள்ளது; அந்த வகையில் மிக வேகமாக உலகளவில் 8000 கோடி வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களின் லிஸ்டில் ஹாலிவுட் படங்களே இடம்பிடித்துள்ளன.
10 . அவதார் (2009) :
ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் 2009ம் ஆண்டு உலகெங்கிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் அவதார். டைட்டானிக் திரைப்படத்தின் வசூலையும் முறியடித்து அதிகம் வசூலித்த திரைப்படம் என 13 ஆண்டுகளுக்கு முன்னர் பெயர் எடுத்த திரைப்படம் அவதார். இப்படம் 19 நாட்களில் 8000 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.
9. தி ஸ்டார் வார்ஸ் : தி லாஸ்ட் ஜெடி (2017) :
ரியான் ஜான்சன் எழுதி இயக்கிய இந்த ஸ்பேஸ் ஓபரா திரைப்படம் 2017ம் ஆண்டு வெளியாகி அபாரமான வரவேற்பை பெற்றது; இந்த எபிக் அட்வென்ச்சர் திரைப்படமும் 19 நாட்களில் 8000 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.
8. தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ் 8 (2017) :
பாஸ்ட் & தி ஃப்யூரியஸ் சீரிஸுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். வின் டீசல், டுவைன் ஜான்சன், ஜேசன் ஸ்டேதம், மிஷெல் ரோட்ரிக்ஸ், டைரஸ் கிப்சன் மற்றும் பலர் நடித்திருந்த இந்த எட்டாவது சீரிஸ் ஆக்ஷன் மற்றும் கார் சேஸிங் காட்சிகளுக்கு பிரபலமானது; அதன் விளைவாக இப்படம் மிக விரைவில் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் டாப் 10 இடத்தை 18 நாட்களில் பிடித்தது.
7. ப்யூரியஸ் 7 (2015) :
பாஸ்ட் & தி ஃப்யூரியஸ் சீரிஸ் ஏழாவது பாகமான ஃப்யூரியஸ் 7 படத்தை ஜேம்ஸ் வான் இயக்கியிருந்தார். ஜேசன் ஸ்டெதம் வில்லனாக நடித்த இப்படம் ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை அதிர வைத்தது. இப்படத்தை காண்பதற்காக திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. 17 நாட்களில் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் பட்டியலில் இடம்பெற்றுவிட்டது.
6. அவதார் ’தி வே ஆஃப் வாட்டர்’ (2022):
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கனவு படமான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ’தி வே ஆஃப் வாட்டர்’ உலகெங்கிலும் 13 ஆண்டுகளுக்கு பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. வெளியான 14 நாட்களிலேயே ஒரு கோடி பில்லியன் அதாவது 8200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
5. ஜுராஸிக் வேர்ல்ட் (2015) :
ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளியான ஜுராஸிக் பார்க் ஒரு பாக்ஸ் ஆபிஸ் மெட்டீரியல் என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தை விரும்பாத ரசிகர்கள் எவரேனும் உண்டோ. இடைவெளி விட்டு வெளியானாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் 2015ம் ஆண்டு வெளியான நான்காவது படமான ஜுராஸிக் வேர்ல்ட் 13 நாட்களில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டது.
4. பைடர் - மேன் : நோ வே ஹோம் (2021) :
ஸ்பைடர் மேன் சீரிஸின் நோ வே ஹோம் திரைப்படம் 2021ம் ஆண்டு உலகெங்கிலும் வெளியானது. முந்தைய ஸ்பைடர் மேன் படங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ இப்படத்திலும் நடித்திருந்தனர். ஸ்பைடர்மேனின் பரம எதிரிகள் என கருதப்படும் ஆக்டோபஸ், சண்ட் மேன், எலக்ட்ரோ, கினீன் காப்ளின் என அனைத்து ஸ்பைடர் மேன் வில்லன்களும் இதில் நடித்தது சிறப்பு. 12 நாட்களில் 8000 கோடியையும் தாண்டி வசூல் செய்து அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்று விட்டது.
3. ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் (2015)
ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் மெட்டீரியலில் அடுத்த படைப்பு ஸ்டார் வார்ஸ் சீரிஸ். ஜார்ஜ் லூகாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் உலகெங்கிலும் வசூலை வாரி குவித்தது; அந்த வகையில் 7வது எபிசோட் தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் 12 நாட்களில் சாதனை படைத்து பட்டியலில் இடம் பிடித்து விட்டது.
2. அவேஞ்சர்ஸ் : இன்பினிட்டி வார் (2018) :
ஒரு சூப்பர் ஹீரோ இருந்தாலே ஹாலிவுட் படங்கள் தெறிக்க விடும் அளவிற்கு வசூலிக்கும் அதிலும் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தால் என்ன ஆவது; அந்த வகையில் அமைந்ததுதான் அவேஞ்சர்ஸ் திரைப்படம்.
தி அவெஞ்சர்ஸ் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள் அவெஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார் திரைப்படத்தை விட்டுவிடுவார்களா என்ன. படத்தின் தயாரிப்பாளர்களை டாலர்களால் நிரப்பியது அந்தப்படம்; பிரதிபலன், 11 நாட்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
1. அவெஞ்சர்ஸ் - தி எண்டு கேம் (2019) :
உலகளவில் இதுவரையில் வெளியான ஹாலிவுட் படங்களிலேயே அதிகமான வசூலை மிக வேகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது 2019ம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் - தி எண்டு கேம் திரைப்படம். இதுவரையில் வெளியான அவெஞ்சர்ஸ் படங்களில் இறுதி பாகமாக இப்படம் வெளியானதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது; இதன் முந்தைய பாகங்களை பார்க்காமல் எண்டு கேம் படத்தை பார்த்தால் ஒன்றும் புரியாது என்றாலும் மிகவும் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றதால் திரையரங்கங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதன் விளைவாக படம் வெளியான 5 நாட்களில் 8000 கோடியையும் தாண்டி வசூல் செய்து அனைத்து ஹாலிவுட் படங்களின் சாதனையை முறியடித்து முதலிடத்தில் உள்ளது.