மார்வெல் நிறுவனத்தின் சில கதாபாத்திரங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவெஞ்சர்ஸ் படங்களில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில், உலகம் முழுவதும் ஸ்பைடர் மேன் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். 

Continues below advertisement

ஸ்பைடர்மேன் பட ட்ரெயிலர் ரிலீஸ்:

2002ம் ஆண்டு டோஃபே நடிப்பில் முதன்முதலில் வெளியான ஸ்பைடர் மேன் படங்களில் தற்போது டாம் ஹாலண்ட் நடித்து வருகிறார். டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேனாக நடிக்கும் புதிய படமான ஸ்பைடர் மேன் ப்ராண்ட் நியூ டே படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஸ்பைடர்மேன் ப்ராண்ட் நியூ டே ட்ரெயிலர் எப்படி?

இதையடுத்து, இன்று இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. கடைசி பாகமான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் தொடங்குகிறது. தனது  நண்பர்கள், சுற்றத்தார் உள்பட அனைவராலும் மறக்கப்பட்ட பீட்டர் பார்க்கர் சந்திக்கும் புதிய எதிரி, ஸ்பைடர்மேன் தனது சக்தியை இழந்து அவதிப்படுவது, அவருக்கு ஹல்க்காக உருமாறும் பேராசிரியர் ப்ரூஸ் பேனர் உதவுவது என்று ட்ரெயிலர் மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது.

Continues below advertisement

டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேனாக நடிக்கும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்து வரும் ஜெண்டயா, ஜேக்கப் படலோன் இந்த படத்திலும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜான் பெர்னதால், மைக்கேல் மண்டோ, சாடி சிங் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இழந்த தனது சக்திகளை ஸ்பைடர் மேன் மீட்டு எதிரிகளை எப்படி துவம்சம் செய்கிறார்? என்பதே இந்த படத்தின் கதையாக அமைந்துள்ளது. 

ரிலீஸ் எப்போது?

இந்த படம் உலகெங்கும் ஜுலை 31ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதியில் மார்வலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இணைந்து நடிக்கும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கும் ஸ்பைடர்மேன் ப்ராண்ட் நியூ டே படத்திற்கும் தொடர்பு இருக்கும் வகையில் இந்த படம் அமைந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களிலே கேப்டன் அமெரிக்கா, தார் கதாபாத்திரங்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டிருக்கும் கதாபாத்திரம் அயர்ன் மேன் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரமும், ஸ்பைடர்மேன் கதாபாத்திரமும் மிகவும் நெருக்கமான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஸ்பைடர் மேன் படங்களுக்கு வழக்கமான வரவேற்பை காட்டிலும் பல மடங்கு அதிகளவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனால், இந்த படத்தின் ரிலீசையும் மார்வல் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.