ஹாலிவுட்டின் கடைசி ஆக்ஷன் ஹீரோ என்று கருதப்படும் டாம் க்ரூஸின் பிறந்த நாள் இன்று தனது 61-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கிட்டதட்ட 40 ஆண்டுகளாக ஹாலிவுட் திரையுலகின் நிகரில்லாத ஆக்ஷன் ஹீரோவாக இருந்துவருகிறார் டாம் குரூஸ். தனது படங்களுக்கு தானே ஆபத்துகள் நிறைந்த ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது டாம் குருஸின் ஹாபி என்றே சொல்லலாம். விமானத்தில் தொத்திக்கொண்டு போவது, மலையிலிருந்து பைக் ஓட்டிக்கொண்டே குதிப்பது என தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய சாதனையை செய்து வருகிறார் டாம் குரூஸ். அவரது படங்களில் அவர் செய்த ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளின் தொகுப்பு இது.
மிஷன் இம்பாஸிபள் தி ஃபால் அவுட்
மிஷன் இம்பாஸிபள் தி ஃபால் அவுட் திரைப்படத்தின் ஒரு காட்சியில் மிக வேகமாக ஓடி ஓடி ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவும் காட்சியில் டாம் குருஸ் நடித்தபோது அவரது காலை உடைத்துக்கொண்டார்.