Tom Cruise Ana de Armas Wedding: 62 வயதான டாம் க்ரூஸிற்கும், 37 வயதான அனா டி அர்மாஸிற்கும் இடையே 25 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தகக்து.
டாம் க்ரூஸ் - அனா டி அர்மாஸ் திருமணம்?
ஹாலிவுட்டில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நீண்ட காலமாக சேர்ந்து வாழ்ந்து வந்த, தனது இணையர்களை பிரிந்து வருவது என்பது அதிகரித்து விட்டது. அதோடு, மறுமணம் என்பது சாதாரணமான செயலாகிவிட்டது. அந்த வகையில் டாம் க்ரூஸின் முன்னாள் மனைவியான நிகோலே கிட்மேன், தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சூழலில் தான் நீண்ட நாட்களாக வதந்திகளாக பரவி வந்த, டாம் க்ரூஸ் மற்றும் அனா டி அர்மாஸ் இடையேயான காதல் தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் மிகவும் புகழ்பெற்ற டாம் க்ரூஸ், தனது அடுத்த திருமணத்தையும் அதே பாணியில் அரங்கேற்ற முடிவு செய்துள்ளாராம். அதன்படி, விண்வெளி அல்லது நீருக்கு அடியில், அல்லது ஸ்கை டைவிங் சூழலில், காதலி அனாடி அர்மாஸை கரம்பிடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
விண்வெளியில் முதல் திருமணம்
”அதிரடியான மற்றும் ஆபத்தான ஆக்ஷன் காட்சிகளில் கூட தானே நடிப்பதன் மூலம், சர்வதேச அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை டாம் க்ரூஸ் உருவாக்கியுள்ளார். தனது ஆடம்பரமான வாழ்க்கை மூலம், சராசரி மனிதர்களின் வாழ்வில் இருந்து பெரிய அளவில் விலகியே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான் பார்ப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும் என முடிவெடுத்து, அனாடி அர்மாஸை பிரமாண்டமான முறையில் கரம்பிடிக்க முடிவெடுத்துள்ளார்” என ராடார் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் ஜோடி என்ற பெருமையை பெற அவர் யோசித்துள்ளாராம்.
62 வயதில் 37 நடிகையுடன் திருமணம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் டாம் குரூஸ் மற்றும் அனா டி அர்மாஸ் வெர்மான்ட்டுக்கு ஒரு பயணத்தின் போது கைகோர்த்துச் சென்றபோது தங்கள் உறவை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இருவரின் காதல் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வந்தாலும், இருவருமே அதுதொடர்பாக எந்தவித உறுதிப்படுத்தலையும் தற்போது வரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டாம் க்ரூஸ் ஏற்கனவே மிமி ரோஜர்ஸ், நிக்கோல் கிட்மேன் மற்றும் கேட்டி ஹோம்ஸ் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், அனா டி அர்மாஸ் மார்க் க்ளோடெட்டை திருமணம் செய்து பிரிந்தார். மேலும் பேட்மேன் திரைப்படத்தில் நடித்து பிரபலமான பென் அஃப்லெக்குடன் உறவில் இருந்ததகாவும் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
டம் க்ரூஸ் மற்றும் அனாடி அர்மாஸ் ஜோடி, கடல் சார்ந்த சூப்பர் நேட்சுரல் படமாக உருவாகும் ”டீப்பர்” எனும் திரைப்படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.