மர்லின் மன்றோ வின் 97-வது பிறந்தநாள் இன்று. ஒரு நடிகையின் வாழ்க்கை அவர் வாழும் காலத்திலும் அவரது இறப்பிற்குப் பின்பும் தொடர்ந்து பேசப்பட்டது என்றால் அது மர்லினின் வாழ்க்கைதான். ஒவ்வொரு ஆண்டும் மார்லின் வாழ்க்கையில் இருந்து ஏதோவொரு புதிய தகவல் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கின்றது
கடந்த 2017-ஆம் ஆண்டு மார்லின் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் ஏலத்தில் விடப்பட்டன. இதில் அவரது உடைகள், காலணிகள், வீட்டில் அவர் உபயோகப்படுத்தியப் பொருட்கள், சிலப் படங்களின் திரைக்கதைப் பிரதிகள், என அனைத்தும் சேர்த்து மொத்தம் 13 மில்லியன் ரூபாய்கு ஏலத்தில் விற்கப்பட்டன.
தனது ஐந்து வயதிலிருந்தே நடிப்பின் மேல் தனக்கு ஆர்வம் இருந்ததாக டைம்ஸிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் மர்லின். நடிப்பின் மேல் தீராத காதல் கொண்ட மர்லின் தனது தொடக்க காலத்தில் இதழ்களின் அட்டைப்படங்களுக்கு மாடலிங் செய்து வந்தார். இந்த சமயத்தில் அவர் தனது நிர்வாணமான புகைப்படங்களையும் எடுத்துள்ளார். பின்பு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மர்லின் ஆரம்பத்தில் காமெடிப் படங்களில் நடித்து வந்தார். இந்த சமயத்தில் அவரது நிர்வாணப் படங்கள் பரவலாகின. மார்லினின் ஒட்டுமொத்த வாழ்க்கையை புரட்டிபோட்ட நிகழ்வு இது. இந்த புகைப்படங்கள் அவரது பாதகமாக இல்லாமல் ரசிகர்களுக்கு அவர் மீதான ஆர்வத்தையே அதிகப்படுத்தின. மிக குறைந்த காலத்தில் புகழின் உச்சத்திற்குச் சென்றார் மர்லின்.
ஆனால் அவரது இந்தப் புகழே அவருக்கு பல பிரச்சனைகளையும் உண்டாக்கியது. மர்லினின் தனிபட்ட வாழ்க்கை மிகவும் சிக்கலானது. மனநலம் பாதிக்கப்பட்டவர் மர்லினின் தாய். மர்லின் தனது தந்தையை சின்ன வயதில் இருந்தே பார்த்ததில்லை. தனது 16 வயதில் முதல் திருமணம் செய்துகொண்டார் மர்லின். பின்பு இந்தத் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்று அடுத்துவரும் காலங்களில் இரண்டு நபர்களைத் திருமணம் செய்துகொண்டார்.
மர்லின் பல்வேறு மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது அவரது மரணத்திற்குப் பின்னரே தெரியவந்தது. அவரது நடத்தைகளை வைத்து அவருக்கு பைபோலர் டிஸார்டர் இருந்ததாக கூறுகின்றனர் மருத்துவர்கள். தனது இளமைக்காலத்தில் மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த மர்லின் தனது வாழ்நாள் முழுவதும் மோசமான கனவுகளால் துரத்தப்பட்டார். இதன் காரணத்தினாலேயே தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டார். இதனை சமாளிக்க போதை பழக்கத்திற்கு அடிமையானார் மர்லின். இளமையிலேயே புகழின் உச்சத்திற்கு சென்ற மர்லின் அந்த புகழை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தார். 1962-ஆம் ஆண்டு தனது 36-வது வயதில் அளவுக்கதிகமான தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் மார்லின்.
மர்லின் என்றென்றும் வாழ்பவர். அவரை நேசிப்பவர்களின் மனதில்