தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். வாக்குப்பதிவு ஆரம்பமான சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி 192 வது வார்டு வாக்குசாவடிக்கு சிவப்பு நிற ஆல்டோ காரில் வந்து வாக்களித்தார்.






அதைப்போல நடிகர்கள் கமல்ஹாசன், அருண் விஜய், நடிகை குஷ்பு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.


 






அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி தி நகர் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை செலுத்தினர். ஆனால் தேர்தல்களின் போது, தங்களது வாக்கை செலுத்தும் முன்னணி பிரபலங்களான ரஜினி, அஜித், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது வாக்கை செலுத்த வரவில்லை.






 


ஆனால் இந்தப் பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நபர் அஜித். காரணம், பொதுவெளியில் அதிகமாக வெளிவராத அஜித், இது போன்ற தேர்தல்களின் போது நிச்சயம் வருவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதன்படியே இன்றும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலை அவர் வரவே இல்லை.. இதனையடுத்து அவர் ஏன் வரவில்லை என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் கேட்கப்பட்டு வருகிறது. இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்த போது.. அஜித் தற்போது சென்னையில் இல்லை என்பதும் அதனால்தான் அவர் வாக்களிக்க வரவில்லை என்பது தெரியவந்தது.