பின்னணி பாடகர் க்ரிஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தவெக ஆதரவாளர்கள் இடையில் கவனமீர்த்துள்ளது. கரிகால சோழனையும் விஜயை ஒப்பிட்டு பாடகர் க்ரிஷ் இந்த வீடியோவில் பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது . வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன நிலையில் தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு திரைத்துறையினர் வெவ்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். விஜய்க்கு எதிராக பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள் எதிர் கருத்துக்களையே தெரிவித்துள்ளார்கள். இப்படியான நிலையில் பின்னணி பாடகர் க்ரிஷ் விஜக்கு ஹைப் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தவெக ஆதரவாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது
விஜய்க்கு ஆதரவாக பின்னணி பாடகர் க்ரிஷ்
எல்லாருக்கும் வணக்கம் . ஒரு குட்டி கதை. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு இளஞ்சேட்சென்னி என்கிற ஒரு சோழ மன்னர் இருந்தார். சோழ மன்னர்களில் அவர் கொஞ்சம் பலவீனமான மன்னர். இதனால் பாண்டியர்கள் ராஜ்ஜியத்தை கைபற்றுகிறார்கள். ராணி அப்போது கர்ப்பினியாக இருக்கிறார். மன்னர் இறந்துவிடுகிறார். ராணி தனது மக்களுடன் காட்டில் சென்று ஒளிந்துகொள்கிறார். சோழருடைய வாரிசான அந்த குழந்தையை கொலை செய்ய பல முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால் அந்த குழந்தை எல்லா கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து வந்து வளர்ந்து வருகிறார். தனது தந்தைக்கு நடந்த கொடுமையை தெரிந்துகொண்டு அந்த இளம் சோழ வீரர் மீண்டும் தனது ராஜ்ஜியத்தை கைபற்றுகிறார். சேரர்கள் ஒருபக்கம் , பாண்டியர்கள் ஒருபக்கம் இருக்க ஒரே ஆளாக நின்று அவர்களை வெல்கிறார் அந்த இளம் சோழன். அவர்தான் கரிகால சோழன். இந்த வரலாறு மீண்டும் நடந்தால் நல்லா இருக்கும். மீண்டும் வருவாரா கரிகாலன் " என பின்னணி பாடகர் க்ரிஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
