ரசிகர்களுக்காக கிளைமேக்ஸில் மாற்றமா? 'ஜன நாயகன்' படத்தில் 41 விநாடிகள் புதிய காட்சிகள்!

Continues below advertisement

விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில். தணிக்கை வாரியம் இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கியிருந்த நிலையில்  தற்போது படத்தில் 41 விநாடிகள் புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்லது. ஜனநாயகன் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் கசிந்த காரணத்தினால் ரசிகர்களுக்காக புதிய காட்சிகள் சில படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பல்வேறு போராட்டங்களுக்குப் பின் முதலமைச்சர் விஜய் என்கிற டைட்டில் கார்டுடன் ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விஜயின் கடைசி படம் என்கிற உற்சாகம் மட்டுமில்லாமல்  தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய்  தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் நிகழ்வாகவும் படத்தின் ரிலீஸ் பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் படத்திற்கான முன்பதிவுகள் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக புதிய டிரெய்லர் ஒன்றும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

41 விநாடிகள் புதிய காட்சிகள்

சமீபத்தில் ஜன நாயகன் திரைப்படம் மீண்டும் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் (CBFC) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு 41 விநாடிகள் புதிய காட்சிகள் இணைக்கப்பட்டதாக தணிக்கை பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றத்தால் படத்தின் மொத்த ஓட்ட நேரம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 52 விநாடிகளாக உயர்ந்துள்ளது. இருப்பினும், படத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 'A' சான்றிதழில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த 41 விநாடிகள் குறித்த தகவல் ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  குறிப்பாக, , சமீபத்தில் ஜன நாயகன் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் இணையத்தில் கசிந்ததால், அந்த காட்சிகளுக்குப் பதிலாக புதிய கிளைமேக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வராக விஜய் பதவியேற்றதை கொண்டாடும் விதமாக இந்த காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது . இதுகுறித்து படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச். வினோத் இயக்கியுள்ள ஜன நாயகன் திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ, நாரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.