கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்று மீம்ஸாகவும் , போஸ்டாகவும் சமூக வலைத்தளங்களில் கலக்கியது. படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை நிஜத்தில் இருப்பது போலவே நெட்டிசன்கள் பேச தொடங்கினர். குறிப்பாக அவர் தலையில் சுத்தியல் விழுந்ததற்கெல்லாம் பிராத்தனை செய்தது வேற லெவல் . என்னதான் ஃபன்னாக இருந்தாலும் கூட , வடிவேலும் என்னும் கலைஞனை ரசிகர்கள் எந்த அளவிற்கு மிஸ் பண்ணுறாங்க என்பதை உணர முடிந்தது. வடிவேலும் கம் பேக் கொடுக்க இந்த நேசமணி கேரெக்டர் வைரல் ஆனதும் மிக முக்கியமான காரணம் என்றால் மிகையில்லை. 






இந்த நிலையில் ஃபிரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற நேசமணி படப்பெயராகவும் உருவானது. நடிகை ஓவியா, யோகி பாபு இணைந்து நடிக்கும் படத்துக்கு காண்டிராக்டர் நேசமணி எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பெயரின் தலைப்பை பூமர் அங்கிள் என படக்குழு பெயர்மாற்றம் செய்துள்ளது. வடிவேலு தரப்பில் இருந்து காண்டிராக்டர் நேசமணி என்ற தலைப்புக்கு விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் அதனால் அவருக்கு மதிப்பளித்து படத்தின் பெயர் மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பூமர் அங்கிள் படத்தின் போஸ்டர்கள் இன்று வெளியானது. அதில், வொண்டர் வுமன் கெட்டப்பில் ஓவியாவும், சாதாரண கெட்டப்பில் யோகி பாபுவும் இடம்பெற்றுள்ளனர்.