தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியன் இன்றைய தமிழ் சினிமா பற்றி பல கருத்துக்களை பகிரங்கமாக முன்வைத்துள்ளார். நேர்காணல் ஒன்றில் அவர் பல தகவல்களை கொடுத்து இருந்தார்.

 

 


 

 

"இடைவேளை வரைக்கும் படமா எடுக்குறாங்க. இடைவேளைக்கு அப்புறம் ஜாதி ரீதியான படமா கொண்டு போறாங்க. அதனால் மக்களுக்கு பிடிக்க மாட்டேங்குது. நாம எல்லாருமே படிச்சவங்க. படிக்காத முட்டாள் கிடையாது. இந்த காலத்துல யாரும் ஜாதியை பார்த்து பழகுவதில்லை, என்ன ஜாதி என கேட்பதில்லை. பைத்தியக்காரன் தான் கேட்பான். இது போன்ற ஒரு காலகட்டத்தில் நாம வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவர்களாகவே நாங்க பிற்படுத்தப்பட்டவர்கள் என சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அப்படினு ஏதாவது லேபிள் ஒட்டி வச்சுருக்குதா. அவர்களே சொல்லிக்கொள்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர் என மேடையில் போய் சொல்லிக் கொள்பவர்கள் தான் 3 கோடி மதிப்பில் உள்ள பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார்கள். 

 

 

வெளிப்படையான மக்களோட வாழ்க்கை என சினிமாவில் காட்டுறீங்க. ஆனா வெளிப்படையான வாழ்க்கையா நீங்க வாழ்றீங்க. பணம் இருக்கறவன் முற்படுத்தப்பட்டவன், பணம் இல்லாதவன் பிற்படுத்தப்பட்டவன். இது இன்னிக்கு மட்டும் இல்ல என்னைக்கும் இது தான். சாதாரண மனிதன் மேடையில் ஏறி பேச முடியாது. அப்படியும் அவன் பேசினால் இவங்களே அவனை உட்கார வச்சுடுவாங்க. சினிமா என்பது ஒரு தொழில். அதுக்குள்ள எதுக்கு ஜாதியை கொண்டு வரவேண்டும். 

 


 

 

எல்லா படமுமே பெரிய அளவில் ஓப்பனிங்குடன் ரிலீஸாவதில்லை. முதல் இரண்டு காட்சியிலேயே தெரிந்து விடும். இப்போ 'வாழை' படத்துக்கு எதிர்பார்த்ததை விட ஓப்பனிங் பயங்கரமா இருந்துது. அதுக்கு காரணம் முதல் இரண்டு மூன்று நாட்களை விமர்சனம் நல்ல படியா வந்தது. அதே போல 'கொட்டுக்காளி' படத்துக்கும் நல்ல ஓப்பனிங் இருந்தது. முதல் இரண்டு நாட்களுக்கு இரண்டு படத்துக்கும் சரிசமமான காட்சிகள் திரையிடப்பட்டன. 

 

 

ஆனால் மூன்றாவது நான்காவது நாளில் 'கொட்டுக்காளி' படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டு 'வாழை' படத்துக்கு அதிகமான ஷோகள் வழங்கப்பட்டன. மக்களுக்கு படம் பிடித்து இருக்கிறதா இல்லையா என்பது ஒரே காட்சியில் தெரிந்துவிடும்” என்றார் திருப்பூர் சுப்பிரமணியன்.