டிக்டாக் முன்னாள் பிரபலம்... பிக்பாஸ் இந்நாள் பிரபலம் ஜி.பி.முத்து பெயரை சொன்னாலே, அவருக்கான ரசிகர் கூட்டம் உலகளவில் உள்ளது. ‛வணக்கம் நண்பர்களே...’ என பேச்சை தொடங்குவதிலிருந்து  ‛செத்த பயலே... நாரப்பயலே...’ என வசை பாடுவது வரை எதை சொன்னாலும் ஜிபி முத்து ரசிக்கப்படுகிறார். தன் மீதான கிண்டல்களையே தனக்கான சதகமாக மாற்றியிருக்கும் ஜி.பி.முத்து, தினமும் தனது தினசரி நடவடிக்கைகளையும் , தனக்கு வரும் பரிசுகளையும் பதிவிட்டு தானமும் மகிழ்ந்து, தன்னை பின் தொடர்பவர்களையும் மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் தான் ஜி.பி., பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்கிற தகவல் தீயாய் பரவியது. விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ‛வணக்கம் நண்பர்களே’ என்கிற வாசகத்தை மட்டும் வெளியிட்டிருந்தனர். அது ஜிபி முத்துவின் அக்மார்க் வசனம் என்பதால், ஜிபி முத்து பிக்பாஸ் விஜயம் உறுதி என தகவல் பரவியது,


 



 


போதாக்குறைக்கு ஜி.பி.முத்துவும் தனது பங்கிற்கு பிக்பாஸ் என்கிற பேக்ரவுண்ட் முன் நின்று சமீபத்தில் ஒரு போட்டோ வெளியிட, அவ்வளவு தான்... பிக்பாஸ் ரசிகர்களும், ஜிபி முத்து ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். 


 



அது உண்மையா, பொய்யா என்பதை முடிவு செய்வதற்குள் அவரும் பிக்பாஸ் பேக்ரவுண்ட்டில் ஒரு போஸ்ட் போட்டு அனைவரையும் கிரங்கடித்தார். இந்நிலையில் தான் இன்று ஜி.பி.முத்து பதிவிட்ட வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. மும்பைக்கு தன் நண்பர்களுடன் ஜி.பி.முத்து பயணிக்கும் வீடியோ அது. 


வெளிமாநிலம் செல்லும் தனது முதல் ரயில் பயணத்தை சிலாகித்து ஜிபி முத்து வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்க, வழக்கம் போல அவரது ரசிகர்கள் உள்ளே புகுந்து கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். ‛சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லுங்க... மும்பையில் நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க...’ என பாட்ஷா பாணியில் சிலர் கேட்க, ‛என்னத் தலைவரே... ஆபரேஷன் எதுவும் பண்ணப்போறீங்களா...’ என நக்கலடிக்க அதுக்கும் வழக்கம் போல கூலாக பதிலளித்து கடந்த ஜி.பி.முத்துக்கு கடுப்பேற்றியது ஒரு ரசிகரின் கேள்வி. ஒரு பாலத்தின் மீது ரயில் சென்று கொண்டிருந்த போது, ‛இதோ பாருங்க நண்பர்களே எவ்வளோ பெரிய பாலம்...’ என ஜி.பி முத்து வெள்ளந்தியாக கேட்க, ‛நல்லா இருக்கு தலைவரே... அப்படியே மேல இருந்து குதிச்சீங்கனா... பார்க்க இன்னும் நல்லா இருக்கும் தலைவரே...’ என கூற, கடுப்பாகிவிட்டார் ஜி.பி.முத்து. 


இதற்கிடையில் ரயிலில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக இருந்ததால், அதன் மீது கோபம் கொண்ட ஜி.பி.முத்து கழிப்பறை சுத்தம் குறித்து அரசும், மக்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பாடம் எடுத்தார். அதே போல ரயிலில் தரப்பட்ட சட்னி மீதும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். 


ஜி.பி.முத்து மும்பை ரயில் வீடியோ முழுமையாக பார்க்க...