Salman Khan : 'அதான் அவரே சொல்லிட்டாருல..' பட்டாசு சம்பவம்; ரசிகர்களை கண்டித்த சல்மான் கான்!

டைகர் 3 படத்தின் போது திரையரங்கத்தில் ரசிகர்கள் பட்டாசு வெடித்ததற்கு நடிகர் சல்மான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

டைகர் 3

மனீஷ்சர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான்  நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 படத்தில்  தற்போது கத்ரீனா கைஃப், இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். டைகர் 3 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது . யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸின் வெளியாகும் ஐந்தாவது படம். முன்னதாக சல்மான் கான் நடித்து வெளியான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹேய், பதான், வார் ஆகிய நான்கு படங்களின் தொடர்ச்சியாக தற்போது இந்தப் படம் நேற்று வெளியானது.

Continues below advertisement

திரையரங்குகளில் பட்டாசு வெடித்து சர்ச்சை

ஒரு பக்கம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க. சல்மான் கானின் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறார்கள். திரையரங்கங்களில் பட்டாசுகளை வெடித்து மக்களை அவதிப்படுத்தியும் திரையரங்க இருக்கைகளில் நெருப்பு ஏற்படுத்தியும் செய்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த செயல்களுக்குப் பின் சல்மான் கான் ரசிகர் மன்றத்தில் பங்கு இருப்பதாகவும் தெரிய  வந்துள்ளது. இந்த பிரச்சனையை மேலும் தீவிரமாக்கி உள்ளது. முன்னதாக இதுபோன்ற நிகழ்வின் போது சல்மான் கான் தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தது குறிப்பிடத் தக்கது. 

Continues below advertisement