பேஸ்புக்.. யூடியூப்... இப்போ இன்ஸ்டா... எதை திறந்தாலும், ‛செத்தப்பயலே... நாரப்பயலே... அறுத்தி கிழிச்சிடுவேன்...’ என அர்ச்சனைகளை அள்ளி வீசும் ஜி.பி.முத்து வீடியோக்கள் தான் எங்கு பார்த்தாலும். டிக்டாக் செயலி மூலம் இணைய உலகில் அறிமுகமான ஜி.பி.முத்து, அதன் பின் ஓவர் நைட்டில் பிரபலமானார். ‛பேக் ஐடிகளை’ பேப்பர் ஐடி என கூறும் அவரது அறைகுறை ஆங்கில உச்சரிப்புகளும், நெல்லை தமிழ் ஸ்லாங்கும், ஜி.பி.முத்துவை எங்கேயோ கொண்டு சென்று விட்டது. யார் கண்ணு பட்டுச்சோ... டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதுவரை ரவுடிபேபி சூர்யா, சிக்கா, திருச்சி சாதனா என பிஸியாக இருந்த ஜிபி முத்து, டிக்டாக் தடையால் சோர்வடைந்தார். 


ஆனாலும் மனிதர்... மக்களை விடுவதாக இல்லை. யூடியூப் சேனல் துவங்கி, தனது கலாட்டாக்களை கட்டம் கட்டி பதிவேற்றினார். சகட்டுமேனிக்கு ‛செத்தப்பயலே... நாரப்பயலே...’ என விடாமல் அனைவரையும் திட்டி, தன்பால் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருந்தார். அதன் விளைவு, டிவி நிகழ்ச்சிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு நிற்காமல் ஜிபி முத்து புகழ், சினிமா உலகிலும் பரவத் தொடங்கியது.




அதன் நீட்சியாக சில படங்களில் வாய்ப்பு கிடைக்கத் துவங்கியது.அவற்றிக்கெல்லாம் உச்சமாக சன்னி லியோனுடன் நடிக்கும் வாய்ப்பை சமீபத்தில் பெற்றார் ஜி.பி.முத்து. வீரசக்தி, சசிக்குமார் தயாரிக்கும் காமெடி கலந்த திகில் படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். குக் வித் கோமாளி புகழ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் பெயரிடப்படாத அந்த படத்தை யுவன் இயக்குகிறார். அந்த படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் ஜி.பி.முத்து நடிக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், அதில் ஜி.வி.முத்துவும் பங்கேற்று வருகிறார். இந்த தகவல் காட்டுத்தீ போல வெளியே பரவ... வழக்கம் போல ஜி.பி.முத்து ஆர்மி, அவரையும், சன்னியையும் இணைத்து மீம்ஸ்களை தட்டத்துவங்கியுள்ளனர்.


இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜி.பி.முத்து, ‛அட செத்தப்பயலுவலா... நாரப்பயலுவலா... நான் சன்னி லியோன் அக்கா கூட நடிக்கிறது உங்களுக்கு பிடிக்கலை... இப்படி பண்ணி வைக்காதீகலே... இதையெல்லாம் சன்னி லியோன் அக்கா பார்த்தா என்ன நினைப்பாக...’ என வேதனையுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ஜி.பி.முத்துவின் இந்த பதிவையும் வழக்கம் போல அவரது ஆர்மி கலாய்த்து வருகிறது. ‛மொத்தத்தில் எங்க தலைவர், சன்னி கூட பின்னி பெடலெடுக்கிறார்,’ என சிலாகித்து வருகிறது. இதெல்லாம் நல்லதுக்கா... கெட்டதுக்கானு தெரியலேயே என நினைத்துக் கொண்டு ஜி.பி.முத்து வழக்கம் போல கமெண்ட்களை படித்துக் கொண்டிருக்கிறார். ‛பாவம் ஒரு மனுஷன் எவ்வளவு கஷ்டத்தை தான் தாங்குவாரு,’ என அதற்கும் ஒரு மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறது ஜிபிமுத்து ஆர்மி!