Thunivu Worldwide Collection: உலகளவில் பட்டையை கிளப்பும் துணிவு... முதல் நாளே இவ்வளவு வசூலா..? துள்ளும் ரசிகர்கள்..! 

தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் பட்டையை கிளப்பிய 'துணிவு' திரைப்படம் உலகளவில் 39 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித் நடிப்பில் பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக ஜனவரி 11ம் தேதி வெளியான திரைப்படம் 'துணிவு'. அன்று நள்ளிரவு வெளியானது முதல் இப்படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகளவில் வெளியான இப்படத்திற்கு திரையரங்கங்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

Continues below advertisement

 

 

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பின் இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார்- தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “துணிவு”. ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, பகவதி பெருமாள், மோகன சுந்தரம், ஜான் கொக்கைன், அஜய் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படம் பொங்கல் வெளியீடாக  வெளியானது.

 

 

கிரெடிட் கார்டு, வங்கி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாக கொண்டு வங்கியில் நடைபெறும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் நிச்சயமாக அஜித் ரசிகர்களுக்கு ஒரு திரை விருந்தாக அமைந்துள்ளது. தமிழ் நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் வசூல் வேட்டையில் திக்கு முக்காட வைத்துள்ள துணிவு திரைப்படம் உலகளவிலும் பட்டையை கிளப்பி வருகிறது. 

FDFS வசூல் எவ்வளவு :

இதற்கு முன்னர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியும் வசூலும் பெறாததால் துணிவு திரைப்படம் மேல் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. துணிவு படத்தின் FDFS  12 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

 

 

உலகளவில் முதல் நாள் வசூல் :


தமிழில் 'துணிவு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'தெகிம்பு' என்ற பெயரிலும் வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே உலகளவில் 39 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிடும் ஓப்பனிங் கொடுத்துள்ளது துணிவு என்பதை உலகளவில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

Continues below advertisement