துணிவு படத்தின் கதாப்பத்திரங்கள்







ஹெச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் துணிவு. போனி கபூர் தயாரிக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து மூன்று பாடல் வெளியாகியுள்ளது.இன்று இப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர்


சார்பட்டாவில் நடித்த ஜான் கோக்கன் - க்ரிஷாக நடித்துள்ளார். பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் -  மை பாவாக நடித்துள்ளார். தயாரிப்பாலர் ஜீ எம் சுந்தர் - முத்தழகனாக நடித்துள்ளார். நடிகர் பிரேம் - பிரேமாகவே நடித்துள்ளார். நடிகர் வீரா - ராதாவாக நடித்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம் பக்ஸ் - ராஜேஷாக நடித்துள்ளார்.
 
சர்ச்சையில் சிக்கிய பிரபு சாலமன்


செம்பி திரைப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பிரபு சாலமனிற்கும் செய்தியாளர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.



செம்பி திரைப்படத்தில் இயேசு குறித்து ஒரு வசனம் இடம்பெற்றுள்ளதாம். அதில் ' உன்னிடத்தில் செலுத்தும் அன்பை நீ பிறரிடத்தில் செலுத்து - இயேசு ' என்ற வசனம் இடம்பெற்றுள்ள காட்சி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் " இது கிறிஸ்துவ மதத்தை பரப்புவது போன்ற திரைப்படமா ? "என பிரபு சாலமனிடம் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த இயக்குனர் பிரபு சாலமன்,"அது என் நம்பிக்கை; நான் பின்பற்றுவது" எனக் கூறினார்.இது வாக்குவாத வடிவில் மாற்றம் பெற ,செய்தியாளர் ஒருவர் ," இது போன்ற வசனம் பகவத் கீதையிலும் உள்ளது' என கூறினார்.மீண்டும் பதிலளித்த பிரபு சாலமன்,"பகவத் கீதையை படித்தவர்கள் அவ்வாறு கூறினால் நான் எதுவும் சொல்லப் போவதில்லை,கிறிஸ்தவம் மதமே இல்லை" எனவும் கூறிய பின்பு "அந்த வசனம் உங்கள் மனம் புண்படும் வகையில் இருந்தால் மன்னித்து கொள்ளவும் "எனக் கேட்டார்.இது அந்த செய்தியாளர்கள் திரையிடலில் வாக்குவாதம் வடிவில் உருமாறியது.


விஜய் ஏன் நம்பர் ஒன் ஸ்டார் ?


பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு பெரிய ஹீரோக்களின் படம் நீண்ட ஆண்டுகள் கழித்து நேரடியாக மோதவுள்ளது. இந்த இரு படங்களின் குழுவினரும் அவர்களுக்கான ப்ரோமோஷன் வேலைகளை மும்மரமாக செய்து வருகின்றனர்.






முன்னதாக, வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ, பேட்டி ஒன்றில் “விஜய்தான் நம்பர் 1 ஸ்டார்” என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.சர்ச்சையை கிளம்பிய நிலையில், அதற்கான  தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் தில் ராஜூ. சமீபமாக நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், “விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு சமமான தியேட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன. அப்படி இருப்பினும், என் ஹீரோ விஜய்தான் பெரிய ஸ்டார். அதனால்தான் வாரிசுக்கு நிறைய திரையரங்குகளை ஒதுக்குங்கள் என்று கேட்டேன். ஒருவர் பெரிய ஸ்டார் என்பதை எப்படி நிர்ணயம் செய்யமுடியும் ..? ஒரு திரையுலக நட்சத்திரத்தின் மதிப்பு, அவருக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வசூல் மூலமே நிர்ணயம் செய்யப்படும். 


விஜய் நடித்து வெளியான கடைசி 6 படங்களும், தமிழகத்தில் மட்டும் 60 கோடி ரூபாயிற்கு மேல் வசூல் செய்துள்ளது; ஒரு படம் ஹிட்டோ ஃப்ளாப்போ.. அது வேறு விஷயம். விஜயின் படங்கள் தொடர்ந்து சீரான வசூலை செய்து வருகிறது. அதனால், தற்போது மற்றவர்களை விட அவர்தான் பெரிய ஸ்டார்.” என தனது விளக்கத்தை தில் ராஜூ கொடுத்துள்ளார்


இன்று வெளியான நான்கு படங்கள் 


த்ரிஷா நடிப்பில் ராங்கியும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ட்ரைவர் ஜமுனாவும், சன்னி லியோன் நடிப்பில் ஓ மை கோஸ்ட்டும், கோவை சரளாவின் நடிப்பில் செம்பியும் வெளியாகிவுள்ளது. இந்த நான்கு படங்களில் ராங்கியும், செம்பியும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ட்ரைவர் ஜமுனா மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய படங்கள் நெகடீவ் விமர்சனத்தை பெற்றுள்ளது.


போயஸ் கார்டனில் வீடு வாங்கிய சந்தானம் 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவர்கள் போயஸ் கார்டனில் வசித்த மிக பெரிய பிரபலங்கள்; அவர்களைத் தொடர்ந்து பல திரைபிரபலங்களும் போயஸ் கார்டனில் அடுத்தடுத்து வீடு வாங்கி வருகிறார்கள்; இந்த வரிசையில் தற்போது நடிகர் சந்தானமும் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது






அண்மையில் கூட, சந்தானம் புலி வாலை பிடித்தபடி இருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி ட்ரோல் செய்யப்பட்டது; இந்த நிலையில் நடிகர் சந்தானம் போயஸ் கார்டனில் ஏலத்தில் வந்த வீட்டை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது; அவர் எத்தனை கோடி கொடுத்து அந்த வீட்டை ஏலத்தில் எடுத்தார் என்ற தகவல் வெளியாகவில்லை