தக் லைஃப் 

நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் இணைந்துள்ள படம் தக் லைஃப் . த்ரிஷா , அபிராமி , சிம்பு , ஜோஜூ ஜார்ஜ் , அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

கமல் த்ரிஷா ரொமான்ஸால் சர்ச்சை

தக் லைஃப் படத்தின் டிரைலர் சில நாட்கள் முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பேசு பொருளாகியது. அபிராமியுடன் முத்தக் காட்சி , த்ரிஷாவுடன் காதல் என கமல் இன்னும் காதல் மன்னனாக திரையில் வந்ததை பலர் ரசித்தார்கள் என்றாலும் அதே அளவிற்கு ட்ரோல் செய்யப்பட்டார். குறிப்பாக த்ரிஷா இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கதைப்படி அவர் சிம்புவுக்கு சித்தி என நெட்டிசன்கள் மீம் வெளியிட்டார்கள். கமல் மற்றும் த்ரிஷா இடையில் 30 வயது வித்தியாசமிருக்கும் போது இருவரும் ரொமான்ஸ் காட்சியில் நடித்ததை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை

த்ரிஷா கொடுத்த செம ரிப்ளை 

தம் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் நேற்று மே 20 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கமலுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது குறிதுத் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு த்ரிஷா " இந்த படத்தை அறிவித்த போதே நான் அதில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே எங்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மேஜிக்கலாக இருக்கும் என்று எனக்கு தெரியும். " த்ரிஷாவிம் துணிச்சலான பதிலைக் கேட்டவர்கள் அவரை கைதட்டி பாராட்டினார்கள்.