சமூக வலைதளங்களில் சுடச்சுட அப்டேட்ஸ் கொடுத்து தன் ரசிகர்களுடன் என்றும் பிணைப்பைக் கொண்டிருக்கும் நடிகைகளுள் ஒருவர் சமந்தா. தன் மகிழ்ச்சியான நாள்கள், மன அழுத்தம், விவாகரத்து என ஒரு திறந்த புத்தகமாக தன்னைப் பற்றிய எந்தவொரு தகவலையும் மூடி மறைக்காமல் சுக துக்கங்கள் அனைத்தையும் உடனுக்குடன் சமூக வலைதளங்களின் வாயிலாக தன் ரசிகர்களுடன் பகிர்ந்தே சமந்தா வந்துள்ளார்.

சமந்தா உடல்நிலை:

ஆனால் மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது முதல் சோர்ந்துள்ள சமந்தா கொஞ்ச நாள்களாக சமூக வலைதளங்களுக்கு லீவ் விட்டு  தன் உடல்நிலையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில், முன்பு போல் அவரை சமூக வலைதளங்களில் காண முடியாமலும், எப்போதும் புன்னகை ததும்பி வழியும் சமந்தாவின் முகத்தை மிஸ் செய்தபடியும் அவரது ரசிகர்கள், சமந்தாவின் பழைய புகைப்படங்கள், வீடியோக்களை மீண்டும் பகிர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தனது நண்பர்கள் ஷில்பா ரெட்டி மற்றும் அவரது கணவருடன் சமந்தா முன்னதாக பானி பூரி சாப்பிடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

 

இந்த வீடியோவைப் பகிர்ந்து மகிழ்ச்சியாக பழைய குறும்புடன் சிரித்தபடி இருக்கும்படி சமந்தாவை மீண்டும் காண ஆவலாக இருப்பதாகக் கூறி அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

முன்னதாக  சமந்தாவின் நடிப்பில் யசோதா திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ள நிலையில், படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

சமந்தா வேதனை:

முன்னதாக யசோதா பட நேர்காணல் ஒன்றின்போது  தான் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், தன் உடல்நிலை குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்தது குறித்தும் மனமுடைந்து  சமந்தா பேசினார்.

”வாழ்க்கையில எல்லாவற்றையும் குறித்து நான் பேசியே வந்திருக்கிறேன். நான் நாகரீகமான உடைகள், அசாதாரணமான போட்டோஷூட் செய்த வாழ்க்கைமுறையை காண்பித்திருக்கும் நிலையில், இந்த க்ளாமர் அல்லாத பக்கத்தையும் காண்பிக்க நினைத்தேன். அனைவருக்கும் நல்ல காலம், மோசமான நேரங்கள் வரும் என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் பணக்காரராக இருந்தாலும் சரி, பிரபலமாக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் மோசமான நேரங்கள் இருக்கும். அதை அனைவரும் அறிவது முக்கியம் ," எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.