அல்லு அர்ஜூன்
புஷ்பா 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் அடுத்தபடியாக அட்லீ படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது
அல்லு அர்ஜூன் கையால் விருது வாங்க மறுத்த நயன்
இந்த அறிவிப்பு அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் மற்றும் நயன்தாராவின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் மறுபடியும் வைரலாகி வருகிறது. விருது விழாவில் அல்லு அர்ஜூன் கையால் நயன்தாரா விருது வாங்க மறுத்த வீடியோதான் அது. நானும் ரவுடிதான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அல்லு அர்ஜூன் அவருக்கு வழங்க இருந்தார். அப்போது நயன்தாரா இந்த விருதை நானும் ரவுடிதான் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் கையால் வாங்க விருப்பப் படுவதாக தெரிவித்தார். லேசாக அவமானப்படுத்தப் பட்டதாக உணர்ந்த அல்லு அர்ஜூன் ஓரமாக விலகி நிற்க விக்னேஷ் ஷிவன் விருதை நயனுக்கு வழங்கினார்.