விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் தற்போது இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ₹100 கோடிக்கும் அதிகமான வசூலையும், உலகம் முழுவதும் ₹250 கோடி வசூலையும் கடந்துள்ள இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், 2026-ம் ஆண்டின் வசூல் பந்தயத்தில் விஜய்யை பின்னுக்குத் தள்ளி நடிகர் சூர்யா முதலிடத்தை பிடித்துள்ளார்.

Continues below advertisement

கருப்பு மொத்த வசூல்

வர்த்தக வட்டார தகவல்களின்படி, சூர்யா நடித்த 'கருப்பு' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ₹192 கோடி வசூலித்துள்ளதுடன், உலகம் முழுவதும் ₹340 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன் மூலம் 2026-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக 'கருப்பு' உருவெடுத்துள்ளது.

ஜனநாயகன் வசூல் 

மறுபுறம், விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்', தயாரிப்பு தாமதம், இணையத்தில் காட்சிகள் கசிந்தது (லீக்) உள்ளிட்ட பல்வேறு சவால்களை கடந்து வெளியானது. படம் நல்ல வசூலைப் பெற்றிருந்தாலும், விஜய்யின் முந்தைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் வசூலுடன் ஒப்பிடும்போது இது சற்றுக் குறைவாகவே பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

கோலிவுட்டின் அடுத்த வசூல் நாயகன் 

விஜய் அரசியலுக்கு சென்றுள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில், 'கருப்பு' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் முன்னணி நட்சத்திரமாக சூர்யா உருவெடுத்துள்ளார். பல ஆண்டுகளாக விஜய், அஜித் ஆதிக்கம் செலுத்திய வசூல் போட்டியில், தற்போது சூர்யா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

'கருப்பு' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா தற்போது 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி உள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம், வெளியீட்டுக்கு முன்பே குறிப்பிடத்தக்க ப்ரீ-ரிலீஸ் வணிகத்தை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'கருப்பு' வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் மார்க்கெட் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகரித்துள்ளது.