OTT Release This Week: இந்த வாரம் தென்னிந்திய சினிமாவில் இருந்து பல திரைப்படங்களும் வெப் தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ள ‘இம்மார்டல்’ உள்ளிட்ட படங்களுடன், இந்த வாரம் ரசிகர்கள் பார்க்க வேண்டிய ஓடிடி வெளியீடுகளின் பட்டியலைப் பார்ப்போம்.
1. பத்தா (Baththa)
மொழி: தமிழ் | ஓடிடி: நெட்ஃபிளிக்ஸ் | வெளியீடு: அக்டோபர் 29
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 29ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. 1980களின் வடசென்னையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் லிஜோமோல் ஜோஸ், மாஸ்டர் சாய் பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரையரங்கில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற பத்தா திரைப்படம் ஓடிடியில் மேலும் பரவலான கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
2. லவ்ஆல்வேஸ் (Love Always)
மொழி: தமிழ் | ஓடிடி: ஜியோஹாட்ஸ்டார் | வெளியீடு: அக்டோபர் 30
கௌரி ஜி. கிஷன், ரம்ஜான் முகமது உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லவ் ஆல்வேஸ்’ திரைப்படம் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகிறது. உறவில் விரிசலைச் சந்திக்கும் தம்பதி, எதிர்பாராத விதமாகத் தங்களது இளமைப் பருவத்திற்குத் திரும்பிச் செல்லும் கற்பனைக் கதைக்களத்தைக் மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது
3. அவறாச்சன்அண்ட்சன்ஸ் (Avaraachan & Sons)
மொழி: மலையாளம் | ஓடிடி: நெட்ஃபிளிக்ஸ் | வெளியீடு: அக்டோபர் 30
பிஜு மேனன், ஸ்ரீநாத் பாசி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ள மலையாளப் படமான ‘அவறாச்சன் அண்ட் சன்ஸ்’ அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகிறது. குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தும் தந்தைக்கும் அவரது மகன்களுக்கும் இடையிலான உறவையும், அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களையும் மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக இது உருவாகியுள்ளது.
4. ருத்ரவனம்பிஎஸ் (Rudravanam PS)
மொழி: தெலுங்கு | ஓடிடி: ஜீ5 | வெளியீடு: அக்டோபர் 30
நரேஷ் அகஸ்தியா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ருத்ரவனம் பிஎஸ்’ விசாரணைத் திரில்லர் தொடராக வெளியாகிறது. ஒரு கிராமத்தில் நடைபெறும் தங்கக் கொள்ளை குறித்த விசாரணை, காணாமல் போன நபரைத் தேடும் முயற்சி மற்றும் காட்டில் கண்டெடுக்கப்படும் உடல் என மர்மங்கள் நிறைந்த கதைக்களத்தைக் கொண்டுள்ளது.
5. இம்மார்டல் (Immortal)
மொழி: தமிழ் | ஓடிடி: சோனி லிவ் | வெளியீடு: அக்டோபர் 30
ஜி.வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடித்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படம் அக்டோபர் 30ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது. மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் ஹாரர் படத்தில், குறைந்த வாடகைக்கு ஆடம்பரமான வீட்டில் தங்கும் வாய்ப்பைப் பெறும் இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் மர்மமான சம்பவங்கள் கதையாக விரிகின்றன.
6. தெல்லகாகிதம் (Thella Kaagitham)
மொழி: தெலுங்கு | ஓடிடி: ETV Win | வெளியீடு: அக்டோபர் 29
ஹர்ஷ் ரோஷன், நக்ஷத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தெல்ல காகிதம்’ அக்டோபர் 29ஆம் தேதி வெளியாகிறது. பள்ளிப் பருவத்தில் காதலிக்கும் இரு இளைஞர்களின் உறவு, கல்லூரிப் பருவத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத விளைவுகளை மையமாகக் கொண்ட காதல் நாடகமாக இப்படம் உருவாகியுள்ளது.
7. சிக்மா (Sigma)
மொழி: தமிழ் | ஓடிடி: நெட்ஃபிளிக்ஸ் | வெளியீடு: அக்டோபர் 30
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம், திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகத் தயாராகியுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரம் காதல், நகைச்சுவை, திகில், ஆக்ஷன் மற்றும் விசாரணைத் திரில்லர் எனப் பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களும் தொடர்களும் ஓடிடி ரசிகர்களுக்குக் காத்திருக்கின்றன.
