Thiruchitrambalam Release LIVE: சென்னையில் 82 திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம்... அடுத்தடுத்த அப்டேட்!

Thiruchitrambalam Release LIVE Updates: ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திருச்சிற்றம்பலம் படம்

தனுஷ்யா Last Updated: 18 Aug 2022 07:02 PM
தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியானது திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் படம் இன்று தியேட்டரில் வெளியான நிலையில், தமிழ் ராக்கர்ஸ் தளத்திலும் இப்படம் வெளியானது.

திரையை கிழித்த தனிஷின் ரசிகர்கள்

திருச்சிற்றம்பலம் படத்தை பார்க்க வந்த தனுஷின் ரசிகர்கள், உணர்ச்சி வசப்பட்டு ரோகிணி தியேட்டரின் திரையை கிழித்தனர்.

ஓடிடி- யில் படுதோல்வி தியேட்டருக்கு திரும்பிய தனுஷ்..!

திருச்சிற்றம்பலம் படம் பார்த்த ரசிகர்களின் ரிவ்யூ!

Thiruchitrambalam Review: படம் எப்படி இருக்கு ?

‛பழைய ரணங்கள் மறக்குதே.. பெண் தோகை வருடுதே...’ திருச்சிற்றம்பலம் ‛டோர்டெலிவெரி’ விமர்சனம் : https://bit.ly/3A8aSmu


 

தனுஷ் - நித்யா மேனன் காம்போ சூப்பர்

பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் நன்றாக நடித்துள்ளனர். படம் நன்றாகவுள்ளது





விஐபி படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பை பெற்று வரும் திருச்சிற்றம்பலம் படம்

விஐபி போல் திருச்சிற்றம்பலம் படமும் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட்தான் என்று கருத்துகளை பகிர்ந்து வரும் ரசிகர்கள்





எங்கும் எதிலும் திருச்சிற்றம்பலம்..!

திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது





நித்யா மேனனுக்கு குவிந்து வரும் பாராட்டுகள்

தனுஷ் மற்றும் நித்யா மேனன் காம்போ சூப்பராக உள்ளது





திருச்சிற்றம்பலம் ஒரு ஃபீல் குட் மூவி - ரசிகர்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு ஃபீல் குட் மூவி பார்த்துள்ளேன்





திரைக்கு முன் ஆட்டம் போடும் தனுஷின் தீவர ரசிகர்கள்!

திருச்சிற்றம்பலம் பார்க்க சென்ற ரசிகர்கள் திரைக்கும் முன் ஆட்டம் போட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்





காலையில் ட்வீட் செய்த தனுஷ்!

படத்தை பார்த்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்





திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை வெடி வெடித்து வரவேற்ற ரசிகர்கள்..!



ரொம்ப நல்லா இருக்கு சார்... திருச்சிற்றம்பலம் பார்த்து ரசிகர்கள் சொன்னது என்ன..?



சென்னையில் 82 திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம்!

சென்னையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 82 திரையரங்குகளில் 598 காட்சிகளுடன் வெளியானது. 






 

இறுதியாக காத்திருந்த தருணம்... முடிவுக்கு வந்த நிலை... வெளியான திருச்சிற்றம்பலம்!

இறுதியாக காத்திருந்த தருணம்... முடிவுக்கு வந்த நிலை... வெளியான திருச்சிற்றம்பலம்!





வெறித்தனம்.. வெறித்தனம் ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

தனுஷை தியேட்டரில் காண ஆவலாக இருக்கும் ரசிகர்கள்





அனிரூத் மோட் ஆன்..!

தனுஷ் தரிசனம்..!

நடிகர் தனுஷை நேரில் பார்க்கலாம் என எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள் 





கட்-அவுட் வைத்து கொண்டாடும் சேலம் ரசிகர்கள்!

கட்-அவுட் வைத்து கலக்கிய சேலத்து ரசிகர்கள்!





ஊருவிட்டு ஊருவந்து படம் பார்க்கவிருக்கும் தனுஷ் ரசிகர்கள்!

சென்னை ரோகினி தியேட்டரில் படம்பார்க்க ஆவலாக இருக்கும் தனுஷ் ரசிகர்கள்





கோவையிலும் குவியும் தனுஷ் ரசிகர்கள்

கோவையிலும் குவியும் தனுஷ் ரசிகர்கள்





காரைக்காலில் ஹவுஸ்ஃபுல்!

திருச்சிற்றம்பலம் படம் காரைக்காலில் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது





ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு திரையில் ஜொலிக்கவிருக்கும் தனுஷ்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு திரையில் ஜொலிக்கவிருக்கும் தனுஷை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.





போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டை வாங்கும் புதுச்சேரி ரசிகர்கள்

போட்டி போட்டுக்கொண்டு திருச்சிற்றம்பலம் பட டிக்கெட்டை வாங்கும் புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் 





Background

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு செய்யப்படும் புரோமோஷன்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 


தனுஷ் நடித்த  யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்  4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். 



 









 


கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் படமானது நாளை (ஆகஸ்ட் 18) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிட்டதட்ட ஓராண்டுக்குப் பின் தனுஷ் படம் தியேட்டர்களில் வெளியாவதால் ரசிகர்கள் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். தியேட்டர்களில் விறுவிறுப்பாக முன்பதிவு ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விதவிதமாக புரோமோஷன்களை வெளியிட்டு வருகிறது. 



 


ஏற்கனவே பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்றைய தினம்  நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர் இருவரும் படம் குறித்து, அனைவரும் குடும்பத்துடன் வந்து தியேட்டர்களில் பார்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ  வெளியானது. படத்தில் நித்யா மேனன் தனுஷின் தோழியாக நடித்துள்ளார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோவில், “இந்த பலம் (தனுஷ்) இருக்கானே சரியான சாம்பார். அவன் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை. அவனைப் பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னா படத்தை கண்டிப்பா எல்லாரும் தியேட்டர்ல வந்து பாருங்க” என தெரிவித்துள்ளார். இப்படியான புரோமோ வீடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.