இந்தத் தொடர், தொடக்கத்தில் குறும்படமாக திகில் கதைகளுடன் வெளியானது. தற்போது பலதரப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடையும் சினிமா ஆந்தாலஜி தொடராக வெளியாகிறது. 

Continues below advertisement

மூன்றாவது சீசனில் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இணைந்ததுடன், உளவியல் ஜானரில் கதைக்களமும் இருந்தது. இதன் தொடர்ச்சியாக வெளியாகவுள்ள நான்காவது சீசனில் அப்துல் ரொசக், இப்ராஹிம் அல் சமாதி, ஜெனோபர் பாத்திமா மற்றும் ‘சாய் வித் அகமது’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அகமது அல் மர்சூகி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரை அப்ரா பர்ஹானா மற்றும் ஜெனோபர் பாத்திமா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

ஊடகத்துறையினர் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் கலந்துகொண்ட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், பாலிவுட் நடிகர் சோஹைல் கான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர் படக்குழுவினருக்கும் டிரெய்லருக்கும் தனது வாழ்த்து தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் ஜெனோபர் பாத்திமாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், நிகழ்வின்போது அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இந்தத் தொடர் குறித்து ஜெனோபர் பாத்திமா பகிர்ந்து கொண்டதாவது, “குறும்பட வடிவிலான கதைசொல்லலில் ஒரு எளிய முயற்சியாகத் தொடங்கிய இந்தப் பயணம், நான் ஆரம்பத்தில் கற்பனை செய்ததைவிடப் பெரிய ஒன்றாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு சீசனும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், பலருடன் இணைந்து பணியாற்றவும் எங்களது எல்லைகளை விரிவுபடுத்தவும் வாய்ப்பளித்துள்ளது” என்றார். 

நான்காவது சீசனில் புதிய கதைகளின் தொகுப்பு இடம்பெறவுள்ளது. இதில் முதல் கதையாக ‘தி கான்ஜர்’ வெளியாகவுள்ளது. இந்தத் தொடரின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஓடிடி தளம் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.