இர்ஃபான் கான் , நிர்மத் கார், நவாசுத்தின் சித்திக்  ஆகியவர்கள் நடித்து ரிதேஷ் பத்ரா இயக்கிய தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படம் பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது.


கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் லஞ்ச் பாக்ஸ். அந்த ஆண்டு  சர்வதேச கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பான வரவேற்பைப் பெற்றது. லஞ்ச் பாக்ஸ் திரைப்படத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் முதலில் மும்பையில் இருக்கும் டப்பாவாலா பற்றி நமக்குத் தெரிய வேண்டும். சாப்பாட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு கொண்டு சேர்க்கும் ஒரு டெலிவரி சேவை தான் டப்பாவாலா. ஆனால் எந்த வித தொழில்நுட்பப்  பயன்பாடும் இல்லாமல் மனிதர்களின் நேரடி பங்கீட்டில் வெற்றிகரமாக நடந்துவரும் ஒரு நடைமுறை இது. அப்படியானால் இதில் ஏதாவது ஒரு தவறு நிகழ்ந்துவிடாதா என்று நமக்கு தோன்றலாம். ஒருவேளை ஒருவரின் உணவு சேர வேண்டியவருக்கு செல்லாமல் வேறு ஒருவருக்கு டெலிவரி செய்யப்பட்டால் ?


தி லஞ்ச் பாக்ஸ்  (The Lunch Box)


ஈலா என்கிறப் பெண் தனது கணவனுக்கு கொடுத்தனுப்பும் லஞ்ச் பாக்ஸ் தவறாக சாஜன் என்கிற மனைவியை இழந்த 50 வயது ஆணிடம் சென்றடைகிறது. தனது கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டவராய் உணர்கிறார் ஈலா. தான் ஆசைய ஆசையாக சமைத்துக் கொடுக்கும் உணவிற்காக ஒரு நாள் கூட தனது கணவனிடம் இருந்து வராத பாராட்டு சாஜனிடம் இருந்து வருவதே ஈலா தெரிந்தும் சாஜனுக்கு இரண்டாவது முறையாக லஞ்ச் பாக்ஸ் அனுப்புவதற்கு காரணம். கூடவே ஒரு சிறு கடிதமும்.


தி லஞ்ச் பாக்ஸ்


தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படத்தை இயக்குவதற்கு முன் அந்த படத்தில் இடம்பெற்ற டப்பாவாலாக்களைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்கினார் ரிதேஷ். இந்த ஆவணப்படம் அனைவராலும் பாராட்டப்பட அதனை மையமாக வைத்து அவர் இயக்கியப் படம் தான் தி லஞ்ச் பாக்ஸ்.  இர்ஃபான் கான்,  நிர்மத கார் , நவாசுத்தீன் சித்திக் ஆகியோர் நடித்தனர்.


சாப்பாட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு கொண்டு சேர்க்கும் ஒரு டெலிவரி சேவை தான் டப்பாவாலா. ஆனால் எந்த வித தொழில்நுட்பத்தின் மேற்பார்வையின் கீழ் இல்லாமல் மனிதர்களின் நேரடி பங்கீட்டில் வெற்றிகரமாக நடந்துவரும் ஒரு நடைமுறை இது.


ஈலா என்கிறப் பெண் தனது கணவனுக்கு கொடுத்தனுப்பும் லஞ்ச் பாக்ஸ் தவறாக சாஜன் என்கிற மனைவியை இழந்த 50 வயது ஆணிடம் சென்றடைகிறது. தனது கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டவராய் உணர்கிறார் ஈலா. தான் ஆசைய ஆசையாக சமைத்துக் கொடுக்கும் உணவிற்காக ஒரு நாள் கூட தனது கணவனிடம் இருந்து வராத பாராட்டு சாஜனிடம் இருந்து வருகிறது.இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவைப் மையமாக வைத்து எடுக்கப்பட்டதே தி லஞ்ச் பாக்ஸின் கதை.


இந்த இரு கதாபாத்திரங்கள் ஒருவர் வழியாக ஒருவரை அடையாளம் கண்டுகொள்கின்றனர். கிட்டத்தட்ட தங்களது வாழ்க்கையில் புதிதாக எதுவும் எதிர்பார்க்காத ஒருவர், ஆசைகளால் நிறைந்த ஒருவரை அடையாளம் கண்டுகொள்வது என்பது ஒரு புதிய வாழ்வின் தொடக்கம் இல்லையா. அந்த ஆதார உணர்வைத்தான் தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படம் நமக்கு அளிக்கிறது. மிகைப்படுத்தாத திரைமொழி லஞ்ச் பாக்ஸ் படத்தின் மிகப்பெரிய பலம். மேலும் எந்த இடத்தில் கதையை சொல்லவேண்டும் எந்த இடத்தில் பார்வையாளர்களின் கற்பனைக்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிற முடிவை இயக்குநர் மிக சிறப்பாக கையாண்டு இருக்கிறார். பத்தாண்டுகளுக்குப் பிறகும் புத்துணர்வளிக்கும் ஒரு படைப்பாக இருக்கிறது தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படம்.