'தி லெஜண்ட்'


லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள 'தி லெஜண்ட்' படத்தின் ட்ரெய்லர் ஒரே நாளில் ஒரு கோடி வியூவ்ஸ் கடந்துள்ளதற்கு அப்படத்தின் இசையமைப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரங்களில் தோன்றி தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானவர் அக்கடையின் உரிமையாளர் சரவணன் அருள். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ’தி லெஜண்ட்’.


இப்படத்தில் ஊர்வசி ரௌடலா, கீர்த்திகா, நாசர், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஜேடி ஜெர்ரி படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 


இந்நிலையில், தி லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர் ஒரே நாளில் ஒரு கோடி வியூவ்ஸ் கடந்துள்ளதற்கு அப்படத்தின் இசையமைப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.






இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே நாளில் ஒரு கோடி வியூவ்ஸ். பட்டியலில் முதலிடம்! அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.


’வாடி வாசல்’


இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வாடி வாசல்’ என்ற பாடல் கடந்த மே 20ஆம் தேதி வெளியானது. அந்தப் பாடலையும் இணையத்தில் அதிகமானோர் கண்டிருந்தனர். இப்போதுவரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த பாடலை கண்டுள்ளனர். ஏற்கெனவே தமன்னா, ஹன்சிகா தொடங்கி யாஷிகா வரை பல நடிகைகளுடன் சரவணன் அருள் திரையில் தோன்றி ரசிகர்களை காண்டாக்கி வரும் நிலையில், தற்போது லட்சுமி ராயுடன் அவர் போட்ட குத்தாட்டத்தை வைத்து சிலர் ட்ரோல் செய்யவும் தவறவில்லை.


இந்நிலையில் தான் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. அதை இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.


லெஜண்ட் சரவணன் ஒருபுறம் ட்ரோல் செய்யப்பட்டாலும், மற்றொரு புறம் அவரது பட பாடல்கள், ட்ரெய்லர் என எல்லாமே மாஸ் ஹீரோ பட ரேஞ்சுக்கு வைரலாகிறது. இவ்வாறு 'தி லெஜண்ட்'  படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய், அஜித்துக்கு டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணா என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


இதையெல்லாம் அனுபவிக்கிறதா இல்ல வேண்டாமா என்று ஒரு படத்தில் கவுண்டமணி பேசிய வசனம் தான் நினைவுக்கு வந்து செல்கிறது.