தி லெஜண்ட்:


தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படத்தை   ஜேடி- ஜெர்ரி இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விவேக், ஊர்வசி ரௌடேலா, கீர்த்திகா, நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசை மற்றும் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவானது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.









ரஜினி- விஜய் தான் இன்ஸ்பிரேஷன்:


படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு முன்னர், படத்தின் நாயகன் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  "தி லெஜண்ட் திரைப்படம் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். இப்படத்தில் காமெடி, ஆக்ஷன் , மாஸ், ரொமான்ஸ் ஆகியவை கலந்த படமாக இருக்கும். இப்படம் இந்திய சினிமாவுக்கே ஒரு எடுத்துக்காட்டாக அமையும். மிகப்பெரிய வெற்றி படமாகவும் இருக்கும் எனவும் பேன் இந்தியா படமாக இருக்கும்” எனக் கூறினார்.


ரஜினி மற்றும் விஜய் இன்ஸ்பிரேஷன்:


தொடர்ந்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்: 


கேள்வி: உங்களுக்கு எந்த நடிகர்களை பிடிக்கும்?


பதில்: எனக்கு சினிமாவில் ரஜினி மற்றும் விஜய் தான் இன்ஸ்பிரேஷன்.


கேள்வி: எதிர்காலத்தில் நடிப்பீர்களா? 


பதில்: கதைகள் அமைவதை பொறுத்து முடிவெடுப்பேன். நல்ல கதை அம்சங்கங்கள் கொண்ட இயக்குநர்களுடன் பணியாற்ற விருப்பம்.


கேள்வி: உங்களை நிறைய விமர்சனம் செய்கிறார்களே? அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பதில்: விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் 


கேள்வி: நடிகர் விவேக்கின் காட்சிகள் முடிவுற்றதா?


பதில்: நடிகர் விவேக் அவர்களின் காட்சிகளை சிறப்பாக எடுத்துள்ளோம். முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது.


கேள்வி: இவ்வளவு பிரமாண்டம் ஏன்?


பதில்: வெற்றிகாகத்தான்


கேள்வி: தொழிலில் வெற்றி பெற்று விட்டீர்கள். சினிமாவில் உங்கள் இலக்கு என்ன?


பதில்: இலக்கு எல்லாம் ஒன்றும் இல்லை


என அதிரடியாக பதிலளித்தார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண