ஏ. ஐ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இன்றைய  தலைமுறையினருக்கு ஒரு விளையாட்டுப் பொருளாகவே மாறிவிட்டுள்ளது. நாம் மனதில் கற்பனை செய்யும் அனைத்தும் நிஜத்தில் உருவாக்குவதற்கான சாத்தியம் இருக்கிறது என்றால் சும்மா இருக்க முடியுமா என்ன. பிரபல கிரிக்கெட் வீரர்களை வயதாவர்களாக உருவாக்கி பார்ப்பது. ஹாலிவுட் திரைப் பிரபலங்களை இந்திய உடையில் உருவாக்குவது என தினமும் புதிதாக ஏதோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியபடியே இருக்கிறது. தற்போது அதே மாதிரியான  கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


காட்ஃபாதர் உலகில் மலையாள நடிகர்கள்


ஹாலிவுட்டில் புகழ்பெற்றத் திரைப்படமான காட்ஃபாதர் திரைப்படத்தின் கதாபாத்திரங்களில் மலையாள நடிகர்களின் முகத்தை மிகச் சரியாக பொருத்தி அவர்கள் வசனம் பேசும்படியான வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது யார் யார் இந்த நடிகர்கள் என்று பார்ப்போம்.


மோகன்லால்


மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் காட்ஃபாதர் திரைப்படத்தின் கதாநாயகனான மார்லன் பிராண்டோ நடித்த டான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று  நாம் யோசித்திருக்க வாய்ப்பில்லை . ஆனால் இந்த வீடியோ அதை அப்படியே நிகழ்த்திக் காட்டுகிறது. மேலும் மற்றொரு வீடியோவில் அல்பச்சினோ நடித்த மைக்கல் கதாபாத்திரத்தில் மோகன்லாலின் இளம் வயது கதாபாத்திரம் பொருத்தப்பட்டுள்ளது.






 மம்மூட்டி ஃபஹத் ஃபாசில்


காட்ஃபாதர் திரைப்படத்தின் புகழ்பெற்ற காட்சி ஒன்றில் மம்மூட்டி, ஃபஹத் ஃபாசில், மோகன்லால் ஆகிய மூவரும்  நடிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது மற்றொரு வீடியோ.






கமல்ஹாசன்


 நாயகன் திரைப்படத்தில் நடித்த கமல்ஹாசன் காட்ஃபாதர் திரைப்படத்தில் இருந்து நிறைய  விஷயங்களை முயன்று பார்த்திருப்பார். மேலும் மார்லன் பிராண்டோவைப் போல் கமல் ஒருமுறை நடித்து காட்டி அனைவரையும் மிரள வைத்திருப்பார். தற்போது காட்ஃபாதர் படத்தில் கமல் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்கிற ஒரு சின்ன கற்பனையான போஸ்டரும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பேசாமல் எல்லாரும் சேர்ந்து இங்கு ஒரு காட்ஃபாதர் திரைப்படத்தையே எடுத்துவிடலாம் போல.