மனோஜ் பாஜ்பாயி என்ற பெயரைக் கேட்டவுடன் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது அவருடை ஃபேமிலி மேன் வெப் சீரிஸ். அப்பேற்பட்ட புகழ் கொண்ட மனோஜ் பாஜ்பாயி தனது குடும்பப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட அது வேகமாகப் பரவிவருகிறது.


அந்தப் புகைப்படத்தில் மனோஜ் பாஜ்பாயி, அவரது மனைவி ஷபானா ராஸ், மற்றூம் அவர்களது மகள் அவா நைலா ஆகியோர் உள்ளனர். மனோஜ் வெள்ளை நிற பைஜாமாவிலும், ஷபானா பாரம்பரிய உடையிலும் உள்ளனர். அந்தப் புகைப்படத்தின் ஹைலைட்டாக மகள் அவா உள்ளார். அவரது இளம் பச்சை உடை கண்கவரும் வகையில் உள்ளது. படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள மனோஜ் பாஜ்பாயி, குடும்பம்..கூடவே கண் திருஷ்டி இமோஜியையும் அவர் பதிவு செய்துள்ளார். 






அந்தப் படத்தின் கீழ் கார்த்திக் ஆர்யன் அன்பு என்று பதிவிட்டு ஒரு ஹாட்டின் பகிர்ந்துள்ளார். கஜ்ரஜ் ராவ் லவ்லி என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நோனித் ராயும் அன்பைத் தெரிவித்துள்ளார்.


அதேபோல் இன்ஸ்டாகிராமில் இன்னொரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் என்று குறிப்பிட்டுள்ளார். மாலத்தீவில் குடும்பத்தினருடன் சென்ற சுற்றுலாவின் போது இப்படங்களை அவர் எடுத்துள்ளார். அதனால் இந்தப் புகைப்படங்களுக்கு மாலத்தீவு டைரீஸ் என்று அவர் பெயர் சூட்டியுள்ளார்.






யார் இந்த மனோஜ் பாஜ்பாயி?


மனோஜ் பாஜ்பாயி பிரபல பாலிவுட் நடிகர். இவர் பெரும்பான்மையாக இந்தி திரைபப்டங்களில் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர். 2019 ஆம் ஆண்டில், கலைக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த பத்மஸ்ரீ அவருக்கு வழங்கப்பட்டது.


பீகாரில் உள்ள நர்காடியகஞ்சில் ஒரு சிறிய கிராமமான பெல்வாவில் இவர் பிறந்தார். பாஜ்பாயி குழந்தை பருவத்திலிருந்தே ஒரு நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் தனது பதினேழு வயதில் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். மேலும் தேசிய நாடக பள்ளியில் கற்பதற்கு விண்ணப்பித்தார். நான்கு முறை இவரின் விண்ணப்பம் அங்கு நிராகரிக்கப்பட்டது. கல்லூரியில் படிக்கும் போது தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார். துஜ்கால் (1994) திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்திலும், சேகர் கபூரின் பண்டிட் குயின் (1994) திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்திலும் பாஜ்பாய் நடித்தார். சில திரைப்படங்களில் நடித்த பிறகு ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டில் வெளியான சத்யா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பாஜ்பாய் பெற்றார். பின்னர் கவுன் (1999), ஷூல் (1999) போன்ற படங்களில் நடித்தார். சிறந்த நடிகருக்கான தனது இரண்டாவது பிலிம்பேர் விமர்சகர்கள் விருதை வென்றார்.


2003 ஆம் ஆண்டில் வெளியான பிஞ்சர் திரைப்படத்திற்காக இவர் தேசிய விருதுக்கான சிறப்பு நடுவர் விருதினை வென்றார். பின்னர் 2010 ஆம் ஆண்டில் ராஜ்நீட்டி எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் பேராசை குணம் கொண்டவரக நடித்தார்.இது பரவலான பாராட்டினைப் பெற்றுத் தந்தது.