தனி ஒருவன் 2  ஆம் பாகத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த டீசரை இயக்கியது யார்  என்பதை தெரிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.






 


தனி ஒருவன்


மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து, 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார். தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன்,  உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி  இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. 


இந்தப்படம் வெளியாகி   8 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தில் (ஆகஸ்ட் 28)  படத்தின் இயக்குநர் மோகன் ராஜா தனி ஒருவன் திரைப்படத்தின் 2 பாகத்தின் அறிவிப்பை அறிவித்தார். இதற்கான ஒரு சிறப்பு வீடியோவும் வெளியிடப் பட்டது .


 


தனி ஒருவன் 2


முந்தைய் பாகத்தின் வெற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்க இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட சுவாரஸ்யமானதாக உருவாக்க முழு முயற்சியை படக்குழு செலுத்தி வருகிறது. இதற்கு சான்றாக அமைந்தது இந்த அறிவிப்பு வீடியோ. முந்தைய பாகத்தில் சித்தார்த் அபிமன்யு அசைக்க முடியாத ஒரு வில்லனாக இருக்க இரண்டாம் பாகத்தில் அதை விட ஒரு வலிமையான கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இந்த வீடியோ இணையதளத்தில் பரவலான கவனத்தைப் பெற்று பாராட்டுக்களைப் பெற்றது. இந்த வீடியோ உருவானது குறித்து சில புதிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் மோகன் ராஜா.


ப்ரோமோவை இயக்கியது யார்?


இதனிடையே நேர்காணல் ஒன்றில் ”இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை ஒரு வீடியோவாக வெளியிட வேண்டும் என்று நான் யோசித்து வைத்திருந்தேன். இதற்கான ஐடியா என்னிடம் சின்னதாக இருந்தது. இதனை நான் இயக்குநர் ஏ.எல்.விஜயிடம் தெரிவித்தேன். அதை கேட்டதும் இந்த விடீயோவை தானே இயக்கி தருவதாக அவர் கூறினார். உடனே இதனை நான் எழுதி முடிக்க அவர் இயக்கினார். அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா கேமரா செய்தார் மற்றும்  சாம் சி.எஸ் இசையமைத்துக் கொடுத்தார்.” என்று மோகன் ராஜா தெரிவித்தார். மேலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பெரிய நடிகர் ஒருவரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.