தனி ஒருவன் 2 படத்தின் அப்டேட்டை அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கமான ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனி ஒருவன் திரைப்படம் ரிலீசாகி இன்றுடன் 8 வருடங்கள் ஆவதால், இந்த தினத்தில் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்திலும் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா நடிக்கிறார். 



மேலும் முதல் பாகத்தை தயாரித்த கல்பாத்தி எஸ். அகோரத்தின் ஏ.ஜி.எஸ் நிறுவனமே இரண்டாவது பாகத்தையும் தயாரிக்கிறது. முதல் பாகத்தில் ஹிப்ஹாப் ஆதியின் இசை படத்தின் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையிலும், சித்தார்த் அபிமன்யூ கதாப்பாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும் வகையிலும் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கவுள்ளார் என்ற தகவல் ஆதி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து, 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார். தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், க உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி  இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. 


இந்தப்படம் வெளியாகி இன்றுடன்  8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்றைய தினத்தில் இப்படத்தின் 2-ஆம் பாகத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், படத்தின் இயக்குநர் தனி ஒருவன் திரைப்படத்தின் 2 பாகத்தின் அறிவிப்பை அறிவித்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார்.  அந்த அறிவிப்பில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி,எஸ் உடன் மூன்றாவது முறையாக இணைவதாகவும், நடிகை நயந்தாராவுடன் 4வது முறையாக இணைவதாகவும், ஜெயம் ரவியை வைத்து அவர் இயக்கும் 7வது திரைப்படம் எனவும், தனி ஒருவன் 2 தான் இயக்கும் 11வது திரைப்படம் எனவும் அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.


மேலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பெரிய நடிகர் ஒருவரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.  தனி ஒருவன் பார்ட் 1-ல் நடிகர் வில்லன் கதாப்பாத்திரத்தில் மாஸாக நடித்து அசத்தி இருந்தார் அரவிந்த் சாமி. சொல்லப்போனால் ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் அப்படத்தில் வில்லனுக்கும் இருந்தது. எனவே அவருக்கு நிகரான ஒரு நடிகரையே பார்ட் 2-விலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.