International Film Festival: பெங்களூருவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பசுபதி நடித்த தண்டட்டி திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
கிராமத்து மக்களின் வாழ்க்கையை அழகாக கூறும் படம் தான் தண்டட்டி. தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ரோகிணி வயது மூப்பினால் இறந்து போகிறார். மரணத்திற்கு பிறகு அவர் காதில் அணிந்திருக்கும் தண்டட்டி காணாமல் போகிறது. அதை சுற்றி நடக்கும் உறவினர்களின் சுயநலமும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சாதி ஆணவமும், பேராசை கொண்ட மகள்கள், அக்கறையற்ற மகன் என பாமர மக்களின் வாழ்வியல் சூழலை தண்டட்டி படம் கண்முன் காட்டி வரவேற்பை பெற்றிருக்கார் இயக்குநர் ராம் சங்கையா.
கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி ரிலீசான இந்த திரைப்படத்தில் பசுபதி, ரோகிணி, முகேஷ்க், விவேக் பிரசன்னா என பலர் நடித்துள்ளனர். இதில் போலீஸ்காரராக வரும் பசுபதி தனது நடிப்பில் எதார்த்தை காட்டி இருப்பார். காணாமல் போன தண்டட்டியை கண்டிப்பிடிக்க அவர் முயற்சிப்பதும், உறவுகளின் சலசலப்பை சமாளிப்பதும் சவாலானதாக பசுபதி நடித்து இருப்பார்.
திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை தாண்டி ஓடிடி தளத்திலும் தண்டட்டி படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தண்டட்டி படம் பெங்களூருவில் நடைபெற்ற புதுமையான சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. தமிழில் சிறந்த படம் என்ற வகையில் ஒரு விருதும், சிறந்த தமிழ் நடிகர் பசுபதி என்ற வகையில் இரண்டு விருதுகளை தண்டட்டி படம் வாங்கி குவித்துள்ளது. சர்வதேச விழாவில் விருது பெற்றதால் தண்டட்டி படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
நடிகர்-நடிகைகளின் திறமையான, நேர்த்தியான நடிப்பாலும், திரைக்கலைஞர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வாலும் தண்டட்டி படம் தொடர்ந்து வாழ்த்துகளை பெற்று வருவதாக அதன் இயக்குநர் ராம் சங்கையா கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Seeman on Leo: லியோவுக்கு கட்டுப்பாடுகள்; நிச்சயம் விஜய்க்கு கொடுமைதான் - சீமான் ஆதங்கம்