ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் பயனுள்ள பல தகவல்களை பகிர்வதற்கு பயன்படுவது மட்டுமின்றி நம்மை சிரிக்கவைப்பதற்கும் பல கேளிக்கையான தகவல்களையும் பகிர்வதற்கும் பயன்பட்டு வருகிறது. 

Continues below advertisement

தளுக்கு புளுக்கு தக்காளி:

இணைய உலகத்திற்கு கிடைத்த புதிய வரமாக பார்க்கப்படுவது ஏஐ தொழில்நுட்பம். இந்த ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வீடியோக்கள் உருவாக்கப்பட்டு அவை இணையத்தை கலக்கி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளமாக இருப்பது இன்ஸ்டாகிராம். 

இந்த இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் ஆவதற்காகவே பலரும் பல வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, தற்போது ஏஐ-யில் உருவாகும் வீடியோக்களே அதிகளவு இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அப்படி, இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தி வரும் வீடியோவாக உருவெடுத்துள்ள தளுக்கு புளுக்கு தக்காளி.

Continues below advertisement

நெட்டிசன்கள் வரவேற்பு:

காய்கறிகளையும், பழங்களையும் மனிதர்கள் போல உருவகப்படுத்தி மனிதர்களிடையே நடக்கும் குடும்ப சண்டைகள் போல சித்தரிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் இந்த தொடர் அசத்தி வருகிறது. தளுக்கு புளுக்கு தக்காளி, தேங்காய் தேனாண்டாள், மாங்கா மஞ்சுளா, மேனா மினிக்கி பெர்ரி என அதன் கதாபாத்திரங்கள் பெயர்கள் மிகப்பெரிய அளவில் நெட்டிசன்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

கணவனை குடும்ப வறுமைக்காக பணக்கார பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கும் முதல் மனைவி என்ற இரட்டை ரோஜா படத்தின் கதையை மையமாக உருவாகியுள்ள இந்த இணைய வெப்சீரிஸ் கதைக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு நெட்டிசன்கள் இடையே கிடைத்து வருகிறது. 

இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம்:

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஏஐ வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி வர்த்தக உள்ளிட்ட முக்கிய நிர்வாக பணிகளுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதே திரைப்படத் துறையில் ஏஐ ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எதிர்காலங்களில் ஏஐ திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இணையத்தில் கலக்கல்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் விலங்குகள் எல்லாம் தங்கள் பெயரைக் கூறி பாட்டு பாடி ஆடுவது போன்ற இணையத்தைக் கலக்கியது. மேலும், மனிதர்கள் ஒவ்வொரு விலங்கையும் எப்படி நடத்துவோமாே? அதேபோல மனிதர்களை அந்த விலங்குகள் நடத்தினால் எப்படி இருக்கும்? என்று சித்தரித்து ஏஐ வீடியோக்கள் வெளியானது. இதுவும் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஏஐ வீடியோக்கள் எந்தளவு வரவேற்பை பெற்று வருகிறதோ, அதே அளவு ஏஐ வீடியோக்கள் உண்மையா? போலியா? என்ற சந்தேகப்படும் அளவிற்கு தத்ரூபமாக வெளியாகியும் வருகிறது.